என்று தீரும் இந்த கொடுமை!!
அய்யா உசிதமணிகளே!!
ஒரு நிமிடம்............
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லி பொன்னான பொழுதுகளை இவ்வாண்டும் வீண் அடித்தீர்கள்..!!
பயன் ஏதுமின்றி கழிந்த கூட்டத்தொடர்களின் ஒவ்வொரு மணித்துளியும் குபேரர்களின் வரிப்பணம் மட்டுமல்ல..
80 வயதிலும் சுயமரியாதை இழக்காமல் இட்லி விற்று பிழைக்கும் பாட்டியின் பணம்.
உச்சி வெயிலில் எலும்பு தேய வண்டி இழுக்கும் முதிய குடிமகனின் பணம்.
குடும்பத்துடன் ஒரு நாளாவது இனிமையாக செலவு செய்த வாழ நினைத்து அது கை கூடாமல் வாழ்ந்து வரும் நடுத்தர குடும்ப அப்பாவிகளின் பணம்!!
உங்கள் உயிர் காக்க தம் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி இதுதானா?????
வெள்ளுடையில் ஒரு துளி கறை பட்டால் கூட பொறுக்காத தங்களுக்கு எப்படி தெரியும்...
உடல் முழுக்கு சிகப்பு ரத்தம் வெளியேற உயிரை விட்டவனின் வலி..
வரும் ஆண்டாவது கோடான கோடி மக்களின் சாபத்திற்கு ஆளாகாமல்..
வளர்ச்சிப்பணியில் செலவிடுங்கள் தங்கள் நேரத்தை.
வெளியே உள்ள குப்பையை என் சக குடிமகன் சுத்தம் செய்து விடுவான்..
நேரம் தவறாமல்.
தங்கள் மனதின் உள்ளே மண்டிக்கிடக்கும் குப்பைகளை அகற்றிவிடுங்கள்...
வரும் ஆண்டேனும்...
சாது மிரண்டால் காடு கொள்ளாது.. தங்களுக்கா தெரியாது!!
..................................
Pics: Google Images.
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
My other site: nanbendaa.blogspot.com
10 comments:
புத்தாண்டு வாழ்த்துகள்!! சிவகுமார்!!!
புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..
வேதனையான விஷயம் தான் :(
புத்தாண்டு வாழ்த்துகள்!! சிவகுமார்!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
//வெள்ளுடையில் ஒரு துளி கறை பட்டால் கூட பொறுக்காத தங்களுக்கு எப்படி தெரியும்...
உடல் முழுக்கு சிகப்பு ரத்தம் வெளியேற உயிரை விட்டவனின் வலி..//
நல்ல மொழி நடை.
முக்கிய விழா காலங்களில் பதிவு போட்டால் வாழ்த்துக்கள் மட்டும்தான் பின்னூட்டத்தில் வரும் :-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஹலோ உங்களுக்கில்லை 2011 க்கு, உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
>>> பாண்டி,பிரஷா,ஆமினா,ஜெய்,மணி,ஜீவா.. அனைவருக்கும் இவ்வாண்டு சிறப்பாக அமையட்டும்!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
இனிய வாழ்த்துக்கள்
எஸ்.கே மற்றும் பார்வையாளன் இருவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!
Post a Comment