உலகம் முழுதும் வெளியாகும் ஆங்கில திரைப்படங்களுக்கென கோல்டன் க்ளோப், ஆஸ்கார் போன்ற மிகப்பிரபல விருதுகள் அடுத்த மாதம் அணிவகுக்க இருப்பதால் அதை அனைவரும் ஆவலுடம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆங்கில சினிமா பற்றி ஒரு சிட்டிகை அளவே அறிவு உடையவனின் பார்வையாக இப்பதிவு இருக்கும். ஏதோ நண்பர்களின் தயவில் சிட்டி ஆப் காட், சில்ட்ரன் ஆப் ஹெவென், செவென் சாமுராய், நோ மேன்ஸ் லான்ட், சவுண்ட் ஆப் ம்யூசிக் போன்ற வெளிதேச படங்களை சமீபகாலமாக பார்த்து வருகிறேன். ஆழமான சிந்தனையுடன் எழுத தெரியாது, நண்பர்களே. இனி, இவ்வருட படங்கள் பற்றி இந்த பாமரனின் கருத்து, உங்கள் பார்வைக்கு:
இப்படியும் படம் எடுக்க இயலுமா? முடியும் என நிரூபித்து இருக்கிறார் இந்த 40 வயது இயக்குனர். தங்கள் வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த படம் இது என்பது உலகம் முழுதும் கண்டுகளித்த பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும். நானும் அதை வழிமொழிகிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் நம் மூளைக்கு சவால் விட்டு காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கனவுலகை வைத்து கதக்களி ஆடியிருக்கிறார் நோலன். ஐந்து முறை பார்த்தும் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கையிலும் புதுப்புது விஷயங்கள் புலப்படுகின்றன. படம் வெளியான முதல் வாரமே சென்று பார்த்தேன். படம் முடிந்து இயக்குனரின் பெயர் போட்டதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி பாராட்டினர். ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் தவிர்க்கவே முடியாத இடத்தில் இருக்கிறது இன்சப்சன்.
http://www.youtube.com/watch?v=66TuSJo4dZM
>>> இவ்வருடம் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த பிற படங்கள்:
* சோசியல் நெட்வொர்க் - நாயகன் ஜெஸ்ஸே எய்சென்பெர்கின் நடிப்பு அசத்தல்.
* லெஜன்ட் ஆப் தி கார்டியன்ஸ்
* டெஸ்பிகப்ல் மீ
* ஷ்ரெக் பாரெவர் ஆப்டர்
இம்மூன்று அனிமேசன் படங்களும் அற்புதமாக இருந்தன.
* பிரின்ஸ் ஆப் பெர்சியா - ஹாலிவுட்டில் கூட இப்படி ஒரு 'மசாலா' படமா?
நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.
>>> ஓரளவு சுமாரான படம் :
* அயன் மேன் - 2
>>> பார்க்கத்தவறிய முக்கியமான படங்கள். (விரைவில் பார்க்கவுள்ளேன்).
* ஷட்டர் ஐலன்ட்
* அலைஸ் இன் வொண்டர்லான்ட்
* ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகன்
* தி கராத்தே கிட்
* டாய் ஸ்டோரி - 3
>>> அரங்கில் பார்க்கையிலேயே கொட்டாவி விட வைத்த படங்கள்:
* நைட் அண்ட் டே - டாம் க்ரூஸை நம்பி சென்ற என் புத்திய.....
என் சினிமா பயணத்தில் முதன் முறை அரங்கில்(தேவி பாரடைஸ், சென்னை)
கொட்டாவி விட வைத்த ஆங்கிலப்படம்.
பலர் ரசித்ததாக கேள்விப்பட்டேன். தேவி பாரடைசில் நன்றாக தூங்கினேன். ஆங்கில
படங்களை இனி தேவி பாரடைசில் பார்ப்பதாக இல்லை. வாஸ்து சரியில்லை.
* ரெசிடென்ட் இவில் 4 - ஒன்றும் சொல்வதற்கில்லை. 3D என்றார்கள். அப்படி ஒன்றும்
இல்லையே. அடுத்த பார்ட் எடுக்காமல் இருந்தால் சரி.
>>> ஏகப்பட்ட பில்ட் அப் குடுத்தும் நான் எஸ்கேப் ஆகிய படங்கள்:
* தி லாஸ்ட் ஏர்பெண்டர்
* பிரிடேடர்ஸ்
* சால்ட் - ஏற்கனவே டாம் க்ரூஸை நம்பி மொய்வைத்த பாதிப்பு. ஏஞ்சலினா ஜோலியாக
இருந்தாலும்.... ஐ ஆம் எஸ்கேப்!!
* சா - 7 முதல் பாகம் பார்க்கவே நேரம் கூடவில்லை. இதில் ஏழாவது பாகமாம்.
பாரத்தால் வெளங்கிடும் என்பதால்..டீலில் விட்டு விட்டேன். படம் மொக்கை என்று
கேள்விப்பட்டதும் ஒரு ஆத்ம திருப்தி. காசு மிச்சம்.
* வாலெண்டைன்ஸ் டே - என்னாது காதல் படமா...அதுவும் ஆங்கிலத்திலா.. அதுவும்
திரை அரங்கிலா.. ஆள உடுங்கடா சாமி.
>>> சிறப்பு மரியாதை:
சென்ற வருடத்தின் இறுதியில் வந்து இந்த வருடம் வசூலில் உலக சாதனை செய்த அவதார் திரை வரலாற்றில் ஒரு மைல்கல். ஜேம்ஸ் கேமரூன்....என்னா மனுசய்யா நீ! தலைவணங்கி வாழ்த்துகிறேன்.
>>> அடுத்த வருடம் இந்தியாவில் வெளியாகும் படங்களில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது:
* 127 ஹவர்ஸ் - டான்னி பாய்ல் - ரஹ்மான் கூட்டணியோடு அடுத்த ஆஸ்கரை குறி
வைத்து வந்துள்ள படம். இசைப்புயல் மீண்டும் வெல்வாரா...காத்திருப்போம்.
கோல்டன் க்ளோப் விருதுக்கு ரஹ்மான் இப்படத்தின் மூலம் போட்டியிடுவது
மகிழ்ச்சியை தருகிறது.
* டான்கல்ட் - டிஸ்னியின் சிறந்த படைப்பாக பேசப்படுகிறது. விரைவில்
இங்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
>>> நான் பதிவிட்டவை (படங்களின் பெயரினை அழுத்தி பதிவினை படிக்கவும்) :
* சோசியல் நெட்வொர்க்
* லெஜன்ட் ஆப் தி கார்டியன்ஸ்
* டெஸ்பிகப்ல் மீ
* 127 ஹவர்ஸ்
பல ஆங்கில படங்களை தவற விட்டிருக்கலாம். என் பார்வைக்குட்பட்ட படங்களை பற்றி மட்டுமே இங்கு பதிவிட்டுள்ளேன். வாசித்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
.........................................................................
Photos & video:
Thanks to Google & Youtube
முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே:
பாகம் - 1
பாகம் - 3
பாகம் - 4
.................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com
3 comments:
ஹி ஹி ஹி நான் இதில எந்த படமும் பார்த்ததில்லை
// என்னாது காதல் படமா...அதுவும் ஆங்கிலத்திலா.. அதுவும்
திரை அரங்கிலா.. ஆள உடுங்கடா சாமி //
ஏன் இந்த கொலைவெறி... ஒரு யூத்து மாதிரியா பேசுறீங்க...
அநேகமாக நீங்கள் சொன்ன லிஸ்டில் நான் எந்த படத்தையுமே பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்... இருப்பினும் inception படத்தை மட்டும் பார்க்க விரும்புகிறேன்...
>>> பிரபா, இரவுவானம்.. இன்சப்சன் தவறாமல் பாருங்கள்.
Post a Comment