மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!
முதன் முறையாக வலையில் கவிதை எனும் பெயரில் என் கிறுக்கலை பதிவு செய்கிறேன். கவிதையில் தேர்ச்சி பெற்ற /கவிதை படிப்பதில் ஆர்வம் கொண்ட நண்பர்கள், ஓரிரு வார்த்தைகள் விமர்சித்தால் தொடர்ந்து என் கத்துக்குட்டி கவிதை(?)களை பதிவு செய்வேன். பாஸ் மார்க் கூட பெறாவிடில் பொத்திக்கொண்டு போய் விடுவேன்.
இப்படிக்கு,
LKG கவிஞன்
.....................................
தீயை அணைத்த தீ
பள்ளிச்சிறுமி என தெரிந்தும் இச்சை அடங்காமல் அவளை கண்டு களித்த காமத்தீ...
அந்நேரம் ஒரு மழலையோ அல்லது மரண ஊர்வலமோ அவன் கண்களை கடந்து செல்லுகையில் ஏற்படும் பெருந்தீயினால் சுட்டெரிக்கப்பட்டது!
...............................
நிலவுக்குள் சூரியன்.... என்னவள் நெற்றியில் சந்தனப்பொட்டு!
................................
பைனான்ஸ் கம்பெனியில் போட்ட பணம் கூட கிடைத்து விடும் போல!
கிடைக்காவே கிடைக்காது கண்டக்டரிடம் தஞ்சம் புகுந்த என் எட்டணா!
....................................................
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தாவது சொல்லிவிட்டு போங்கள். நன்றி!
..................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.comஎன் ட்விட்டர் ஐ. டி. - nanbanshiva
.................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites
0 comments:
Post a Comment