நேற்று நடந்த போட்டிகளில் மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றது இந்தியா. 400M தடை ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் அஸ்வினி சிதானந்தாவும், ஆண்கள் பிரிவில் ஜோசப் ஆப்ரஹாமும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 4*400 ரிலே பிரிவில் தங்கம் வென்றிருந்தார். கர்நாடகாவில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த வீராங்கனை. ஐந்து வயதிலேயே வெற்றிகளை குவிக்க ஆரம்பித்த அஸ்வினியின் திறமையை கண்ட அவர் தந்தை சிதானந்தா, வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து தன் மகளின் பயிற்சிக்கு வழி அமைத்து கொடுத்தார். பெங்களூரில் உள்ள தென்னக ரயில்வேயில் டிக்கெட் விற்பவராக இருக்கும் அஸ்வினி ஆசிய விளையாட்டு போட்டிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்த போது 45 நாட்கள் வேலைக்கு செல்ல இயலவில்லை. இருப்பினும் மேலிடம் அவரை ஊக்குவித்து அந்த மாத சம்பளத்தையும் அவருக்கு அளித்துள்ளது. அந்த முயற்சி வீண் போகவில்லை. தடை ஓட்டத்தில் தடை இன்றி தொடரட்டும் அஸ்வினியின் ஆட்டம்!
தங்க அறுவடை செய்த விவசாயி மகள்!
400M தடை ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜோசப். தேசிய சாம்பியனாக திகழும் இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று நடந்த போட்டியில் மயிரிழையில் ஜப்பான் வீரரை வென்று தங்கத்தை தட்டி சென்றார் ஜோசப். இப்பிரிவில் இந்தியா வென்ற முதல் ஆசிய தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்!
குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்தவர் ஹரியானாவை சேர்ந்த 18 வயது இளம் வீரர் விகாஸ் க்ரிஷன். 1998 ஆம் ஆண்டு டிங்கோ சிங்கிற்கு பிறகு குத்துச்சண்டையில் இந்தியா தங்கம் வென்றதே இல்லை. அதை இந்த வெற்றியின் மூலம் சாதித்தார் இவர். 60 கிலோ லைட் வெயிட் போட்டியில் சீன வீரருடன் ஆக்ரோஷமாக மோதினார். சொந்த நாட்டில் சீன மக்களின் பெருத்த ஆதரவுடன் ஆடிய க்விங், பல முறை விகாஸிடம் தவறாக நடந்து கொண்டார். கீழ்த்தரமான ஆட்டமுறையை கையாண்டார் க்விங். எனினும் விகாஸ் 5-4 எனும் கணக்கில் தங்கம் வென்று வெற்றிக்கொடி நாட்டினார். முக்கியமான விஷயம், சீனியர் பிரிவில் இது இந்த இளம் புலியின் முதல் சர்வதேச போட்டியாகும். சென்ற வருடம் நடந்த இளைஞர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார் இவர். இந்திய பாக்சிங் வட்டத்தில் இவரின் செல்லப்பெயர் "மிஸ்டர் கூல்". ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நாள் தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள் விகாஸ்!
இடியை இறக்கும் அடி!
இன்று நடக்கவிருக்கும் குத்துச்சண்டையில் இந்தியா தங்க வேட்டையை நோக்கி களம் இறங்க உள்ளது. ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் உட்பட. கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இன்று இந்தியா இறுதிப்போட்டியில் மோத உள்ளது. வெல்லட்டும் நம் தேசம்!
............................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
twitter id - nanbanshiva
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites
0 comments:
Post a Comment