CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, November 21, 2010

நகரம்

மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!

                                                          
ஸ்டார்ட்டர்:
நல்ல படங்கள் எந்த மொழியில் இருப்பினும் அதை எப்படியாவது பார்த்து விடும் எனக்கு, எப்போதாவது ஒரு கமர்சியல் சினிமா பார்க்கத்தோன்றும். அப்படி சென்றதுதான் நகரம் மறுபக்கம். தலைநகரமான சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று மதியம் பார்த்தேன். தயாரிப்பாளர் குஷ்பு குழந்தைகள் பட்டாளத்துடன் படம் பார்க்க வந்திருந்தார். சுந்தர். சி மிஸ்ஸிங். இடைவேளையில் வெளியே வந்து போன் பேசிக்கொண்டிருந்த குஷ்புவை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். முக்கியமான விஷயம் யுவர் ஆனர், நகரம் படம் தலைநகரம் படத்தின் தொடர்ச்சி அல்ல. தமிழ் சினிமா வரலாற்றில் எடுக்கப்பட்ட நீ(ல)ளமான 'லிப் டு லிப்' காட்சியில் சுந்தர் சி அனுயா நடித்த படம் இது என்று சில பத்திரிக்கைகள் பற்ற வைத்ததை நம்பி படத்துக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு பொட்டு வைத்து பொங்கல் தருவார்கள். அப்படி எதுவும் இல்லை பாஸ். ஒரே ஒரு பருக்கை மட்டும்தான். Exactly 2 seconds liplock inside a car between சுந்தர் அண்ட் அனுயா.  

சாப்பாடு:
சென்னை யானைக்கவுனி (Elephant Gate) ஏரியா ரவுடிதான் கேட் செல்வம்(சுந்தர் சி). திருந்தி வாழ ஆசைப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வரும் செல்வம் போலீஸ் நண்பன் சக்கரைபாண்டிக்காக(போஸ்) மீண்டும் சில தவறுகளை செய்ய நேரிடுகிறது. தன் காதலியுடன் இந்த தொழிலை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக நினைக்கும் செல்வம் என்ன ஆகிறான் என்பதுதான் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸை பார்த்தால் மூன்றாம் பாகம் வந்தாலும் வரலாம். தலைப்பு: மாநகரம்(!).

                                                    
                                                                      
இந்த படத்திலும் தலைநகரம் படம் போல ஒரு தாத்தா தாதா. படத்தில் அவர் பெயர் 'பாய்' (ஸ்ரீநிவாசன்). சில மீடியம் மற்றும் குட்டி தாதாக்கள் கூட பவனி வருகின்றனர்.  தலைநகரத்தில் தாத்தா தாதாவாக வந்த ஜூடோ ரத்னத்தின் நடிப்பு வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் இருந்தது. ஆனால், இதில் ஸ்ரீநிவாசன் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். நடிப்புக்கான ஸ்கோப் கம்மி. நாயகியாக வரும் அனுயா ஓரளவு நடித்திருக்கிறார். வடிவேலுவின் நகைச்சுவை இரண்டு இடங்களில் தியேட்டரை அதிர வைக்கிறது. சுந்தரை "என் ஏரியால வந்து பாரு" என வம்புக்கு இழுக்கும் காட்சி சிரிக்க வைக்கிறது. அதுபோல், இரவில் அடிப்பொடிகளுடன் திருட செல்கிறார். போலீஸ் வளைத்து பிடிக்க, நாம் திருட வந்தது போலீசுக்கு எப்படி தெரியும் என்று அவர் கேட்கிறார். "இது உங்களுக்கு 100 வது திருட்டு, அதனால் ஏரியா முழுக்க போஸ்டர் ஓட்டினோம்" என அடியாட்கள் போஸ்டரை காட்டுகிறார்கள். போஸ்டரில் "100 வது திருட்டை புரிய வரும் திருடர் குல திலகம் வாழ்க! திருடும் இடம், நாள், நேரம். அனைவரும் வருக!" எனும் வார்த்தைகள் அரங்கில் விசில் பறக்க வைக்கின்றன. நாகேஷ், ரஜினிக்கு பிறகு குழந்தைகளின் மனதை கவர்ந்த கலைஞன் வடிவேலு என்பதற்கு அரங்கில் ஒலிக்கும் சிரிப்பு சத்தமே சாட்சி. "என் பேரு கிருஷ்ணவேணி...நான் கல்கத்தாவின் ராணி" எனும் க்ளப்  பாடல் கிளாமர் கிக். மற்ற எந்த பாடலும் மனதில் ஒட்டவில்லை. தமன்...Long way to go!  
                                                                              
சுந்தர் சி, போஸ் இருவரின் நடிப்பும் நன்றாக உள்ளது. பில்ட் அப் இல்லாமல் பொருத்தமான ரோலில் இருவரும் நடித்துள்ளனர்.  'மல்டிபிள் கேங்' வந்து போகும் கதையை குழப்பாமல் இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முத்திரை பதித்த வெகு சில நடிகர்களில் போஸ் குறிப்பிடத்தக்கவர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது நகரம். இப்படிப்பட்ட நடிகரை சிவாஜி படத்தில் சரியாக பயன்படுத்தாமல் இருந்தது வருத்தமே. சுமன் ரோலில் போஸ் இருந்திருந்தாலும் அது நன்றாகவே பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் போஸ் வெங்கட்டுக்கு என்று ஒரு சிம்மாசனம் தயாராகி விடும் நாள் தொலைவில் இல்லை. 


                                                           
என்னை பொறுத்தவரை வித்யாசமாக படம் எடுக்கிறோம் என்று சிலர் உலக சினிமாவை உருவி நமக்கு அல்வா குடுப்பார்கள் அல்லது குடும்ப படம் எடுக்கிறோம் என்று சொல்லி நமக்கு பாடம் எடுப்பார்கள்...படம் எடுக்காமல். அதற்கு பதில் ஹரி, வெங்கடேஷ் படங்கள், நகரம் போன்ற மசாலா படங்கள் எவ்வளவோ மேல் என்பது என் கருத்து. அந்த வகையில் நகரம் பாஸ் ஆகி விடுகிறது. ஆனால்.. 'தலைநகரம்' பார்த்தவர்களுக்கு அதன் பாதிப்பு இந்த படத்தில் பெருமளவு இருந்ததை உணர முடியும். தலைநகரம் கிளைமாக்ஸ் காட்சி மிக நன்றாக படம் ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் நகரத்தில் யூகிக்கும்படியாக உள்ளது. 

                                                                               
சில காட்சிகள் நகரத்தில் நம்பும்படியாக (இல்லவே) இல்லை. பெரும்படை சூழ இருக்கும் 'பாய்' தாதா, சுந்தர் சி அழைத்ததும் தனியாக வெளியே வந்து போஸ் கையால் சுடப்படுவது, ஹோட்டலில் நடக்கும் கலவரத்தை ஹோட்டல் ஊழியர்கள் யாரும் கேள்விப்படாமல் இருப்பது போன்ற காட்சிகள். முக்கியமாக என் கடுப்பை கிளப்பிய காட்சி.. ஹாஸ்பிட்டலில் போஸை சந்திக்க வரும் சுந்தர் சி, போஸின் தோட்டாக்களை துப்பாக்கியில் இருந்து எடுக்கும் காட்சி. இன்னும் எத்தனை வருஷம் இந்த மாதிரி எடுப்பீங்க சாமியோ.. தன் துப்பாக்கி தோட்டாக்கள் 'சுடப்படுவதை' கூட அறியாத போலீஸ் என்ன போலீஸோ? அதுபோல் ஒரு காட்சியில் போஸ் சுந்தர் சி-யை சிறையில் அடைக்க அப்துல்லா எனும் அதிகாரியிடம் யோசனை சொல்லிக்கொண்டு இருப்பார். இதை போலீஸ் வண்டியில் உள்ள கேமரா மொபைல் இதை ரெகார்ட் செய்து கொண்டு இருக்கும். ஆனால் இந்த காட்சி நடக்கும் களமோ....பல ஊழியர்கள் உரக்க சத்தம் எழுப்பி போராட்டம் செய்து கொண்டிருக்கும் வீதி. இந்த வீடியோவை பிறகு ஒரு காட்சியில் போஸிடம் காட்டுவார் அப்துல்லா. அதில் போஸ் பேசிய வார்த்தைகள் மட்டும் கேட்கும்....ஊழியர்களின் போராட்டக்குரல் காணாமல் போய் விடும். எப்பூடி? என்னவோ போங்க. படத்தில் எனக்கு பிடித்த காட்சி... ஹோட்டலில் நடந்த  சண்டையில் தன் முகம் கேமராவில் பதிவாகி இருக்கும் என்பதால் போஸ் ஹோட்டலில் நுழைந்து கம்ப்யூட்டரில் பதிவான காட்சிகளை அழித்துவிடுவார். ஆனால் அடுத்த காட்சியில் அப்துல்லா எனும் அதிகாரி போஸிடம் சொல்லும் வசனம் "நீங்கள் ஹோட்டல் அறையில் அந்த காட்சிகளை அழிக்கையில், அந்த அறையில் உள்ள கேமரா அதை படம் பிடித்து விட்டது".  சூப்பர் சுந்தர் சி. 
                                                     
                                                                                                       
தயாரிப்பு குஷ்பூ என்பதால் படம் முழுக்க பல சின்னத்திரை நடிகர்கள். பாவம், நாயகியாக வெள்ளி மற்றும் சின்னத்திரையில் கலக்கிய நளினி ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். இந்த மாதிரி 'நல்ல ரவுடி' படங்களை பார்க்கும்போது தோன்றுவது....இன்னும் எத்தனை வருடங்கள் தமிழ் சினிமா, நாயகனை நகர ரவுடி, டவுன் ரவுடி, கிராமத்து ரவுடி, குக்கிராமத்து ரவுடி என திரிய வைக்கப்போகிறது. அது எப்புடித்தான் 'செக்க செவேல்'  நாயகிகளுக்கு இந்த ரவுடி நாயகர்களை மட்டும் பிடிக்கிறதோ? என்ன மாதிரி ஒழுங்கா வேலைக்கு போய் சம்பாதிக்கும் பசங்களையும் கொஞ்சம் பாருங்க மேடம். ஏம்பா, ரவுடியா வர்ற ஹீரோ.... நீங்க எதுக்கு ஷேவ் பண்ண அடம் புடிக்கிறீங்க. தலையாவது ஒழுங்கா வாருங்கப்பா. எனக்கு தெரிஞ்சி இந்த கால ரவுடிங்க எல்லாம் ரீபாக், அடிடாஸ் அப்டின்னு டீ ஷர்ட் போட்டுட்டு கலக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா அந்த கட்டம் போட்ட சட்டைய போட்டுட்டு அலையறீங்க. அப்... அப்.... அப்டேட். ஒரு காலத்துல வில்லன் பண்ண வேலைய எல்லாம் இப்ப நீங்க பண்ண ஆரம்பிச்சிடீங்க. அதுதான் கொலைகூட செய்ற நாயகன்னு நடிக்க முடிவு பண்ணியாச்சே, அதுக்கப்புறம் எதுக்கு "நான் நல்லவன். இந்த சமுதாயம்தான்..." அப்டின்னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டு ஓட்டுறீங்க. போதும்.. ரீலு அந்து போச்சி. படத்தில் ஹீரோயிசம் இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை என்பதெல்லாம் சரி. ஆனால் இவ்விரண்டும் இல்லாமல் இருந்தாலே அது நல்ல படம் எனும் கருத்து  சமீப காலமாக உலா வருகிறது. நல்லா இருக்கே நியாயம். மொத்தத்தில் மசாலா பட ரசிகர்களை, குறிப்பாக 'தலைநகரம்' பார்க்காதவர்களை ஏமாற்றாது இந்த நகரம்.  

நகரம்....... 'தலைநகரத்தின்' ஒண்ணு விட்ட தம்பி. 

ஊறுகாய்:
சென்னை சத்யம் தியேட்டருக்கு செல்லும் நண்பர்களே.. சத்யம் தியேட்டர் மாதம் ஒரு முறை வெளியிடும் 'சிம்ப்ளி சத்யம்' எனும் இதழை காண்டீனில் கேட்டு பெறுங்கள். 120 ருபாய் டிக்கட் குடுத்து படம் பார்க்கும் நமக்கு, இந்த புத்தகம் ஒரு போனஸ். தரமான அச்சு. குறைந்தபட்சம் 30 ரூபாய் மதிப்பு இருக்கும். சினிமா ரசிகர்களை கண்டிப்பாக கவரும். மீண்டும் சந்திப்போம். நன்றி! 
......................................
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ.டி. nanbanshiva
......................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

9 comments:

Unknown said...

நல்ல விரிவான அலசல்

Philosophy Prabhakaran said...

நல்லதொரு விமர்சனம்... லிப்லாக் பற்றி விவரம் சொல்லியதற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவிற்கு உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...

! சிவகுமார் ! said...

கண்டிப்பாக பிரபா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super review

Anonymous said...

super review...murali

Anonymous said...

by watching this kind film......ha ha aha .....naanga sirikanuma or engala pathu ooru sirikuma.....

Anonymous said...

sureshsd

குறையொன்றுமில்லை. said...

நல்லா விமர்சனம் எழுதரீங்க. ஆனா எனக்கு தமிழ் படம் பார்க்க வாய்ப்பு ரொம்பவே கம்மிதான். உங்க விமர்சனமே படம் பாத்தமாதிரி இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...