CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, November 8, 2010

ஆரோன்: சிறப்பு பார்வை
மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!

                                                                          
 ஸ்டார்ட்டர்: 
ஸ்லம்டாக் படத்தை தந்த டான்னி பாய்ல் மற்றும் ரஹ்மான் கூட்டணி மீண்டும் பணியாற்றிய படம்தான் இந்த 127 ஹவர்ஸ். கடந்த வெள்ளி அன்று அமெரிக்காவில் ரிலீஸ் ஆகி உள்ளதுவிமர்சகர்கள் மற்றும் பொது மக்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த வருடத்தின் சிறந்த படமாக பாராட்டப்படுகிறது. அடுத்த வருட ஆஸ்கார் போட்டியில் இந்த படம் இடம் பெறும் என உறுதியாக நம்பப்படுகிறது. 

                                                                     
சாப்பாடு: 
இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்பையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்அந்த சம்பவம் என்னவெனில், 2003- ஆம் ஆண்டு அமெரிக்காவின் உடா(Utah) மாநிலத்திற்கு பயணித்தார் 26 வயது மலையேறும் வீரரான ஆரோன் ரால்ஸ்டன். அந்த பயணம் பற்றி எவரிடமும் கூறாமல் கிளம்புகிறார். இந்த பயணத்தில்  ஆபத்து நேர்ந்தால் தன்னை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்பதை அறிந்தே பயணிக்கிறார்,  ஆரோன்.  அங்கு ஒரு மலையில் ஏறுகையில், தவறுதலாக பல அடி கீழே  பள்ளத்தில் விழுந்து  பாறையின் இடையேமாட்டிக்கொள்கிறார்அடுத்த ஆறு நாட்கள்    மரண அவஸ்தை படுகிறார்இறுதியில்இடுக்கில் சிக்கிக்கொண்ட வலது முன்னங்கையை தானே தனியாக உடலில் இருந்துபிரித்து எடுத்து விடுகிறார். பிறகு அவர் 100 அடி, கிட்டத்தட்ட எட்டு மைல் தூரம் கடும் முயற்சி செய்து எப்படி மேலே வருகிறார் என்பதை விவரிக்கும் படம்தான் இந்த 127 ஹவர்ஸ். 


                              

ஆரோன் பாறையின் இடுக்கில் மாட்டிய சமயம், இனி தான் உயிரோடு திரும்புவது சாத்தியமில்லை என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கிறார். தண்ணீர் பாட்டிலில் இருக்கும் மிச்ச நீரையும் குடித்து முடிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் சிறுநீரையே குடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்கிறார் அவர். பாறையில் தன் பெயர், பிறந்த நாள், இறக்கப்போகும் நாள் ஆகியவற்றை எழுதுகிறார் ஆரோன். தன் பையில் உள்ள கேமராவில் தன்னை படம் பிடிக்கிக்கும் அவர், அதில் தன் குடும்பத்திற்கு கண்ணீருடன் விடை பெறுவதாக சொல்கிறார். ஐந்து நாட்கள் கழிந்து விட்டன. இறுதி நாளான ஆறாம் நாளில் தன் கையை வெட்டி எறிந்து விட வேண்டும் என எண்ணிய ஆரோன், சிறிது சிறிதாக முயன்று அதில் வெற்றி பெறுகிறார். 

இறுதி முயற்சி, எட்டு மைல் தூரத்தை கீழிருந்தே மேலே எப்படி கடப்பது? அது அவ்வளவு எளிதானதா? சத்தியமாக சாத்தியமே இல்லை. ஒரு கை இல்லை, கொலை பட்டினி, கொளுத்தும் மதிய நேர வெயில். ஆனால், தன்னம்பிக்கை எனும் பிரம்மாஸ்திரம்  ஆரோனிடம் இருந்தது. மேலே பயணிக்கையில் அங்கே ஓரிடத்தில் ஆறு நாட்களுக்கு முன் சந்தித்த நெதர்லாந்த் சுற்றுலாவாசிகளை காண்கிறார். ஆரோனுக்கு நீரும், பிஸ்கட்டும் தந்து உதவிய அவர்கள், இந்த சம்பவத்தை உடனே மீட்பு குழுவிற்கு தெரிவிக்கின்றனர். பெரும் போராட்டத்திற்கு பின் ஆரோன் காப்பாற்றப்படுகிறார். துண்டிக்கப்பட்ட கையை எரியூட்டி, அதன் அஸ்தியை ஆரோனிடம் தருகின்றனர். ஒரு சரித்திரம் படைக்கப்படுகிறது, ஆரோன் எனும் அசாத்திய மனிதனால். சிறு சலசலப்புகளுக்கே புலம்பி தள்ளும் சக மனிதர்களுக்கு சரியான  பாடம்தான் இந்த மனிதனின் வாழ்க்கை.

                              

அத்துடன் இந்த மாமனிதன் தன் பயணத்தை நிறுத்தவில்லை. 2005-ஆம் ஆண்டு ஒரு கையுடன் கொலராடோவில் அனைத்து சிகரங்களையும் தொட்டு சாதனை படைத்தார் இவர். கொட்டும் பனியில், தனி ஒருவனாக இந்த சாதனை பயணத்தை இவர் 1998 - ஆம் ஆண்டு தொடங்கினார். ஏழு வருடம், 59 சிகரங்கள், என்னவென்று சொல்ல. 2008- ஆம் ஆண்டு எவர் துணையும் இன்றி 20,320 அடி உயர டெனாலி சிகரத்தை தொட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார். எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதே தன் இறுதி இலக்காக கொண்டுள்ளார் ஆரோன். 


                                 

இவர் இந்த சம்பவத்தை புத்தக வடிவில் தந்துள்ளார். பெயர் "பிட்வீன் எ ராக் அண்ட் ஹார்ட் பிளேஸ்". விற்பனையில் சாதனை படைத்ததென சொல்லித்தெரிய வேண்டுமா? இந்த வெற்றி வீரனின் பாத்திரத்தை தாங்கி படத்தில் நடித்து இருப்பவர் ஜேம்ஸ் பிராங்கோ. டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டபோது, ஒரு சில காட்சிகளை கண்ட மக்கள் மயங்கி விழுந்தனராம். குறிப்பாக கையை வெட்டும் காட்சி. அனைத்து விழாக்களிலும் படம் முடிந்ததும் மக்கள் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினர் என பிரபல ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட உன்னத படத்தில் உழைத்த நம்மூர் இசைப்புயல் ரஹ்மானுக்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒரு சில துளிகள் இதோ உங்கள் பார்வைக்கு:

A.R. Rahman's score maintains a hint of Indian influence that's completely appropriate. 
- Composer A.R. Rahman contribute to the making of a uniquely cinematic work, which is viscerally, emotionally, and intellectually satisfying.
A.R. Rahman score that drives the movie, the triumphant 127 Hours pays fitting tribute to Aron by being thrillingly alive.   

இப்படி ஒரு உருப்படியான திரைப்படத்தில் பணியாற்றிய இசைப்புயல், சலனமற்ற தமிழன் ரஹ்மானுக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்! நம்ம ஆளுக்கு அடுத்த ஆஸ்கார் வெகு தூரமில்லை என தெரிகிறது. 

இந்த படத்தின் ட்ரெய்லர் காண கீழே கிளிக் செய்க:

  

படத்தை பற்றி உலகின் பிரபல விமர்சகர்கள் பாராட்டியதில் சில துளிகள்: 
- One of the year's best films: Anchored by James Franco's astounding performance, 127 Hours is a more sharply focused, more emotionally touching, and more technically impressive work than Danny Boyle's 2008 Oscar-winner Slumdog Millionaire.

- 127 Hours becomes the one-man Franco show, and the actor gives a tour-de-force performance. Gripping, thrilling, excruciating, inspirational. One of the best movies of the year.

- 127 Hours is a powerful movie experience, and you owe it to yourself to see it theatrically for the full unforgettable impact. Another great film from Danny Boyle featuring a potentially Oscar-worthy performance from James Franco.
                                                                                                

விரைவில் நம் நாட்டில் வெளியாகப்போகும் இந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். ஸ்லம்டாக் படத்தில் ரஹ்மான் அப்படி ஒன்றும் பெரிதாக கிழித்துவிடவில்லை என்று சொல்லும் சிலருக்கு, இந்த படம் அதை பொய்ப்பிக்கும் என  நம்புகிறேன். இளையராஜா, எம்.எஸ்.வி. எனும் மாமேதைகள் வாழும் தமிழ் மண்ணில் இருந்து உலகை ஆள கிளம்பி இருக்கும் ரஹ்மானுக்கு ஆயிரம் வாழ்த்துகள்!                        

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்:
 "நான் எடுத்த படத்துல வர்ற நாயகி உங்க பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மாதிரி இருப்பா" அப்டின்னு அடிக்கடி நம்ம டைரடக்கருங்க சொல்றாங்களே, உங்க வீட்டு பக்கம் எல்லாம் பொண்ணுக அப்படியா இருக்காக, சாமீ!

......................................................................

..................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ. டி. -  nanbanshiva
.................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

2 comments:

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

எஸ்.கே said...

படம் மியூசிக்லாம் நல்லாருக்குன்னு சொன்னாங்க!

Related Posts Plugin for WordPress, Blogger...