CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 6, 2010

புதிய பதிவன்


  
மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி

ஸ்டார்ட்டர்

ப்ளாக் உலகில் 'பெரும்புள்ளி' ஆக புது பய 'குட்டி' படும் பாடு பற்றிய கற்பனை பதிவுதான் இது. உண்மை சம்பவமாக கூட இருந்திருக்கலாம். 
                                                                    
சாப்பாடு

அனைவரையும் போல யாஹூ, யூ ட்யூப் போன்ற தளங்களை பார்த்து விட்டு கணினியை அனைத்து விட்டு வேறு பிழைப்பை பார்த்து கொண்டிருந்த பயதான் நம்ம குட்டி. ஒரு நாள் எசகுபிசகாக இன்ட்லி மற்றும் தமிழ் - 10 போன்ற தளங்களையும் பார்க்க நேர்ந்தது. உடனே அவன் மனதில் ஞானத்தீ பற்றிக்கொண்டது. "இதுக்குத்தானே காத்திருந்தேன். எத்தனை கடிதம் போட்டாலும் ஒரு பத்திரிக்கை அல்லது டி.வி. நம்ம கண்டு கொண்டதா? மவனே, இனி ப்ளாக் ஒன்ன ஆரம்பிச்சி என் என்ணத்தை எரிமலையா சிதற விட போரண்டா"  என எகிறி குதித்தான் குட்டி. வானம் தலையை தட்டியது. ஏற்கனவே சக நண்பர்கள் வேறு "மச்சி, நீ ஒலக சினிமா, உள்ளூர் அரசியல், விஞ்ஞானம் அப்டின்னு எல்லா மேட்டர்லயும் வூடு கட்டி அடிக்ரயே..பேசாம மீடியால சேந்துரு... இல்ல நீயே ஒரு பத்திரிக்க ஆரம்பி. நீயெல்லாம், இருண்ட ஆப்ரிக்கா இல்லனா வெஸ்ட் ஜெர்மன் மாதிரி எங்கயோ பொறக்க வேண்டியவன் மச்சி!(தமிழ் நாட்ல பொறந்து எங்க உசுர புடுங்குற)" என ஏத்தி விட்டதால், குட்டி உடனே ஒரு ப்ளாக் தொடங்க ப்ளான் 
செய்தான். 

                                                         
                                                       
குட்டி யோசித்தான். ப்ளாக்குக்கு என்ன பேரு வைக்கலாம்? நல்ல தமிழன், புரட்சிதமிழன், எரிமலை, தீப்பொறி என எல்லாம் ஏற்கனவே வைத்து விட்டார்கள். 'சூப்பர் குட்டி' அப்டின்னு பேரு வச்சா?  சான்றோர்கள் இந்த பேர பாத்ததுமே உள்ள வர மாட்டாங்க. சிந்தனை சீர்தூக்கினு பேர் வச்சா யூத் ஒருத்தனும் எட்டிபாக்க மாட்டான். பேசாம 'சேகுவாரா மச்சான்' அப்டின்னு பேர் வைப்போம். அப்பதான் ரெண்டு சைடையும் கவர் பண்ணலாம். விடு ஜூட். அடுத்த ப்ராஜெக்ட்.... எப்படி டிசைன் செய்யலாம்? நம்ம ஆபீஸ்ல இருக்குற ஐ.டி. நண்பன் ரகுவை  வளச்சி போடணும் என எண்ணிய குட்டி நேராக அவனிடம் சென்றான்.."என்ன ரவி, இப்பல்லாம் பேசுறதே இல்ல..பெரியா ஆள் ஆய்டீங்க. வாங்க ஜூஸ் சாப்டுட்டு வரலாம்" என அழைத்தான். ரவி யோசித்தான். "என்னாட இது, பய புதுசா நெஞ்ச நக்குறான்? சரி, ப்ரீயா ஜூஸ் வாங்கி தரான். போய் பாப்போம்" என குட்டியுடன் சென்றான் ரகு. குட்டி ஆரம்பித்தான் "ரகு, என்னோட புது ப்ளாக்குக்கு நீங்கதான் டிசைன் செஞ்சி தரனும். அப்பப்ப வர்ற சந்தேகங்கள தீத்து வக்கணும்". ரகுவின்  மைன்ட் வாய்ஸ் அலறியது "அதான.. எலி ஏண்டா அம்மணமா ஓடுதுன்னு பாத்தேன். இதுக்குத்தானா? இந்த பய நார்மலா இருந்தா பரவால்ல. உதவி செய்யலாம். பயங்கர ஆர்வக்கோளாறு புடிச்சவனாச்சே" என சற்று யோசித்தான். குட்டி விடவில்லை. ரகுவை வீட்டுக்கு அழைத்து பஜ்ஜி, பெப்சி என உபசரித்து ஒருவழியாக சாதித்து விட்டான் குட்டி. ப்ளாக் ரெடி. 

முதல் பதிவாக என்ன போடலாம்?  ரஜினிய பத்தி எழுதுவோம். பாராட்டி எழுதுனா சான்றோர்களுக்கு பிடிக்காது. பேசாம திட்டு எழுதுவோம். எழுதி தீர்த்து விட்டு ஆபீஸ் சென்றான். அங்கு கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் அழைத்து "மாப்ள, நான் புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிச்சி இருக்கேன். மறக்காம படி" என மேளம் அடிக்க ஆரம்பித்தான். நண்பர்களின் மைன்ட் வாய்ஸ் "இவன தூக்கி மவுன்ட் ரோட்ல மல்லாக்க போட".

குட்டிக்கு இருப்பு தாங்கவில்லை. எப்படா ஆபிஸ் முடியும், எத்தன ஓட்டு விழுந்துச்சோ? இன்ட்லி, தமிழ் - 10 ரெண்டையும் சேத்து ஒரு பத்து ஓட்டு கூடவா விழாது?. பணி முடிந்ததும் வீட்டை நோக்கி விரைந்தான். கணினியை ஆன் செய்து, எத்தனை ஓட்டு விழுந்தது என்று பார்த்தான். மொத்தம் விழுந்ததே 2 ஓட்டுகள்தான். "எரிமலை எப்படி பொறுக்கும்.." என குமுறினான். கீழே ஒரு கமெண்ட் இருப்பதை கண்டு துளி சந்தோஷம் குட்டிக்கு. ஆனால் அதில் ஒரு ரஜினி ரசிகர்  குட்டியின் டிரவுசரை கழட்டி இருந்தார். "ஏண்டா புடுங்கி, எங்க தலைவர பத்தி எது வேணா எழுதிவியா..@%&. நாரைப்பயலே #!%&". குட்டி பஞ்சர் ஆனான். ஒரு மாதம் கழிந்தது. இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதி குவித்தான். எது எழுதினாலும் ஒரு பய புள்ளையும் ஓட்டு போடவில்லை. 

                                                                     
குட்டி, பரங்கி மலை உச்சியில் அமர்ந்து சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தான். ஹிட்லர்,  ஸ்பீல்பெர்க் வரலாறு போட்டா.. "விக்கிபீடியால இருந்து சுடுறியே? மானங்கெட்ட மங்கூஸ் தலையா?" அப்டின்னு ஒருத்தன் கமெண்ட் அடிக்றான். அரசியல்வாதிய பத்தி எழுதுனா ஆட்டோ வரும்னு ஆட்டு ஆட்டுன்னு ஆட்ரானுங்க. புது படத்தை முதல் நாள் முதல் காட்சி...அதுவும் காலை ஏழு மணி காட்சி பாத்துட்டு சுட சுட விமர்சனம் எழுதலாம்னு வீட்டுக்கு விழுந்தடிச்சி ஓடுனா, அப்பயும் பப்பு வேகல. அதுக்கு முன்னாடியே சில நல்லவங்க எழுதி முடிச்சுடறாங்க. கேட்டா படம் பாக்கும்போதே லாப்டாப்ல விமர்சனம் எழுதிடறாங்கலாம். ஐ அம் பாவம். 

ஒலக மகா சிந்தைகளை உருக்கி உருக்கி எழுதினாலும் ஒரு ஓட்டுதானா? இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கிறது? அது சரி, அஞ்சி வருசத்துக்கு ஒரு தபா எலக்சன் நடக்கும்போதே ஓட்டு போடாத இவங்க, எனக்கு மட்டுமா போட போறாங்க. சில பேருக்கு மட்டும் முப்பது நாப்பது ஓட்டு விழுதே. அப்படி என்னதான் எழுதி இருக்காங்க அப்டின்னு உள்ள போயி பார்த்த "நேத்து இதமான மழை. டீக்கடை பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு வீட்டு போனேன்" என்று எழுதியதுற்கு முப்பது ஓட்டுக்களா? என்னடா இது சிந்தனை சிற்பி 'குட்டி'க்கு வந்த சோதனை. ஒரு முடிவோடு ஆபீஸ் சென்றான். தன் நண்பர்களிடம் "நான் எழுதனை படிக்ரீங்களா?" என கேட்டான். அவர்கள் "ஓ! ஒரு வரி விடாம படிக்றோம்(அவர்களின் மைன்ட் வாய்ஸ் 'போடா பச்சிலை புடுங்கி')". 
குட்டி பிளிறினான், "படிச்சா,  ஓட்டு போடுங்கடா. டேய், அந்தோணி..வளர்ற பையன்..சாப்டுட்டு போகட்டும்னு சொல்லி என்னோட சிக்கன் பீசை எல்லாம் உனக்கு குடுத்துட்டு வெறும் குஸ்காவ மட்டும் சாப்புடுவனேஅதை எல்லாம் மறந்துட்டியா? இனியாவது ஓட்டு போடுறா" என கண் கலங்கினான் தர்ம தாயின் தவப்புதல்வன் குட்டி. ஷங்கரை பார்த்தான் "உங்கள் கருத்து அற்புதம். அசத்தலான பதிவு" அப்டின்னு ஒரு கமெண்ட் போட்டா கிரீடம் எரங்கிடுமாடா, சங்கரு?".  வடக்கத்திய நண்பன் டிங்குவிடம் சென்றான் குட்டி, "டேய் டிங்கு, நாள் முழுக்க யோசிச்சி ஒரு பதிவு போட்டாலும் யாருமே என்னை மதிக்கல. நீ எப்டிடா மொக்க பதிவு எழுதினாலும் செம ஓட்டு வாங்குற?". டிங்கு "தெரியல. என் பதிவை படிச்சி நல்லவன்னு நம்புறாங்கோ".    

                                                                      
மறுநாள், தனது ப்ளாகை திறந்தான். அட நம்மையும் ஒருவர்  பாலோ(follow) செய்கிறாரே. ஆண்டவன் நல்லவங்களா சோதிப்பான்.ஆனா" பாஷா டயலாக் குட்டியின் மனதில் ஓடியது. பாவம். ப்ளாக் திறந்து நாலு மாசம் ஆகியும் 'சேகுவாரா மச்சான்' குட்டியை யாரும் கண்டு கொள்ளாததால், போனா போகுது என்று ஒருவர் பாலோ செய்திருந்தார். சில உருப்படியான பதிவுகளை காலப்போக்கில் எழுதினாலும், ஓட்டு மட்டும் விழவில்லை குட்டிக்கு. ஊமைத்துரைன்னு பேரு வச்சதுக்கு நல்லா குத்துராங்கைய்யா ஊமை குத்தா.. என புலம்பியவாறு மீண்டும் பரங்கி மலை உச்சியை அடைந்தான் குட்டி. "ப்ளாக் எழுதி புரட்சி செய்ய புழுதி பறக்க பறந்தோடி வந்த இந்த கருப்பு குயில், ஓட்டெடுப்பில் ஓரங்கட்டப்பட்டதால், சிறகொடிந்து மலை உச்சியை சென்றடைந்தது" என ஒரு அசரீரி. 

                                                             
குட்டி கூவினான். "எண்ட் கார்ட் போட்டு எகத்தாளமாடா பண்றீங்க. விடமாட்டேன். என் அடுத்த குறி......ENGLISH BLOG". 


ஊறுகாய்

சில நாட்களுக்கு முன் 'பேருந்து' எனும் தலைப்பில் நான் போட்ட பதிவில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்து இயக்கினால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தேன். அதுதான் பலரின் எண்ணமும் கூட. சமீபத்தில் அரசு சென்னையில் காலை, மாலை இரு வேலைகளிலும் மாணவர்களுக்கு தனி பேருந்துகளை இயக்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்:


"அது என்ன சிட்டில இருக்ற சில பயலுவ ரெண்டு ரூவான்னு சொல்லாம two bucks-னு சீன் போடறானுவ". 
என் மற்றொரு பதிவகம்nanbendaa.blogspot.com

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...