CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 27, 2010

asian gamesஆசிய விளையாட்டு போட்டி:

                                                     எவனா இருந்தா எனக்கென்ன! 

நேற்று  நடந்த 75 கிலோ  குத்துச்சண்டை பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விஜேந்திர சிங், அப்போஸ் எனும் உஸ்பெகிஸ்தான் வீரரை எதிர்கொண்டார். அப்போஸ் உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம சிங்கம் விட்ட சரமாரி குத்தில் 7-0 என்று பரிதாபமாக தோற்றார் அப்போஸ். காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் மட்டுமே வென்ற விஜேந்திர சிங், இந்த முறை தங்கத்தை தட்டி விட்டார்.  

                                                        அனுப் மற்றும் அவனி 

ரோல்லர் ஸ்கேடிங் போட்டியில் எவரும் எதிர்பாரா வண்ணம் இரு வெண்கலங்களை வென்றார் அனுப் குமார். தனிநபர் பிரிவில் ஒன்றும், ஜோடி ஆட்டத்தில் அவனியுடன் ஒன்றும் வென்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டு போட்டிக்கு இவர்களை முதலில் அனுப்பும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை. ஆனால் இறுதியில் முடிவு செய்து அனுப்பினர். அது சரித்திரமாகி விட்டது! 

                                                           சீறிப்பாய்ந்த சிட்டுகள்! 

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ப்ரீஜா வெள்ளியும், கவிதா வெண்கலமும் வென்று பெருமை சேர்த்தனர். 

ஒட்டுமொத்தமாக 64 பதக்கங்களை வென்றதன் மூலம்,  1982 ஆம் ஆண்டு வென்ற 57 பதக்கங்கள் எனும் சாதனையை முறியடித்துள்ளது இந்தியா. மொத்தம் 14 தங்கங்களை வென்று முந்தைய சாதனையான 15 தங்கங்களை (1951 போட்டி) தாண்ட முடியாமல் போனது நம் தேசத்தினால். 

உலக மக்கள் தொகையில் 2 ஆம் இடத்தில் இருக்கும் நாம் வென்றது 14 தங்கங்கள். ஆனால் முதல் இடத்தில் இருக்கும் சீனாவோ இதுவரை 197 தங்கம் வென்று விண்ணை முட்டியுள்ளது. மொத்தம் 412 பதக்கங்கள். நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை பார்த்தால் வருத்தமே மேலிடுகிறது. காமன்வெல்த் போட்டி போல் ஊழல் புரிபவர்கள் இருந்தால் சீனாவின் அருகில் செல்வது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அதையும் மீறி இவ்வளவு பதக்கங்களை வென்ற நம் போட்டியாளர்களை உச்சி முகரவே வேண்டும். பதக்கம் வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் மிகச்சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து இந்த நிலைக்கு வந்தவர்கள். சரியான உபகரணங்கள் தராமல், பொருளுதவி தராமல், தகுந்த நேரத்தில் கவுரவிக்காமல் இந்திய அரசு பாரபட்சம் காட்டியதையும் மீறி இவர்கள் சாதித்தது நம் தேசத்தின் மீதுள்ள பற்றே காரணம் அன்றி வேறில்லை. இனியாவது அரசு கேனைத்தனமாக கிரிக்கெட்டை அரவணைப்பதை நிறுத்த வேண்டும். இந்தியா அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்றால் மாநில விடுமுறை அளிப்பது, பல அரசு விருதுகளை கிரிக்கெட் வீரர்களுக்கே தருவது போன்ற செய்கைகளை நிறுத்தியே தீர வேண்டும். 

                                                                                   
 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மாபெரும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துவோம்!  மீண்டும் சந்திப்போம்! BYE!
...........................................................................................................
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com 


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

     

11 comments:

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

Submit your blog/site all the links here to get more traffic... This is a new tamil bookmark website...


www.ellameytamil.com

Unknown said...

திறமைக்கு பஞ்சமில்லை நம் நாட்டில்,ஊழல் மட்டும் ஒழிந்துவிட்டால் போதும்.

எஸ்.கே said...

கிரிக்கெட் மட்டுமில்லாமல் மற்ற விளையாட்டுகளுக்கும் சம அளவு சலுகைகளும் பாராட்டுகளும் அளித்தால் இந்தியா விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும்!

எப்பூடி.. said...

எனக்கு ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் அதிக ஆர்வம் இல்லை, இருந்தாலும் கிரிக்கட்டால் மற்றைய விளையாட்டுகளுக்கு பாதிப்பு என்னும் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு வணக்கம் எந்த முறையும் இல்லாமல் இப்பொழுது உள்ள இளைய சமுதாயம் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது அதிலும் குறிப்பாக விளையாட்டுத் துறையில் பல பதக்கங்கள் மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது . இது போன்று நமது நாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வீரர்களுக்கு இன்னும் ஊக்குவிக்கும் வகையாக பல சலுகைகளை நமது அரசு ஏற்ப்படுத்தினால் இப்பொழுது உள்ள வீரர்களுக்கும் இனி வரும் வீரர்களுக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்பது மட்டும் திண்ணம் . பகிர்வுக்கு நன்றி தோழரே சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் .

Guruji said...

உங்கள் தளத்தை பார்வையிட்டேன் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது நேரம் கிடைக்கும் போது முழுமையாக படித்து கருத்து சொல்கிறேன் நன்றி

Prabu M said...

இந்த வீரர்களை ஊக்குவிக்க ஸ்பான்ஸர்கள், அரசாங்க கவனம் இவற்றையெல்லாம் விட இதோ நீங்கள் காட்டுகிறீர்களே கவனம் அதுதான் முக்கியம்... வீரர்கள் பற்றி உங்கள் பதிவில் கிடைத்த விவரங்கள் சுவைகூட்டின.... தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... நாங்களும் கவனிக்கிறோம் உங்கள் மூலம் இந்த தங்க வெள்ளி வெண்கல நாயகர்களை...

Prabu M said...

இந்த வீரர்களை ஊக்குவிக்க ஸ்பான்ஸர்கள், அரசாங்க கவனம் இவற்றையெல்லாம் விட இதோ நீங்கள் காட்டுகிறீர்களே கவனம் அதுதான் முக்கியம்... வீரர்கள் பற்றி உங்கள் பதிவில் கிடைத்த விவரங்கள் சுவைகூட்டின.... தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... நாங்களும் கவனிக்கிறோம் உங்கள் மூலம் இந்த தங்க வெள்ளி வெண்கல நாயகர்களை...

மாணவன் said...

அருமை,

சிறப்பான பதிவு

தொடருங்கள்...

நன்றி

ராஜ நடராஜன் said...

இந்த கடை கண்ணுலேயே தட்டுப்படாம போனது எப்படி?

ராஜ நடராஜன் said...

வந்தாரை வாழவைக்கும் அன்னை எங்கள் சென்னை என்பது கோடம்பாக்க கனவுலகத்துக்கு வேணுமின்னா சரியா இருக்கலாம்.கோடம்பாக்கம் சுத்தாமலே எனக்கும் என்பதும் உண்மை.

ஆனா ஊர் சுத்தினதுல சென்னை அன்னையை விட மும்பாய் மகாலட்சுமிதான் உசத்தி என்பது அனுபவம்.

Related Posts Plugin for WordPress, Blogger...