ஆசிய விளையாட்டு போட்டி:
இன்று விடுமுறை தினம் என்பதால்(அமெரிக்காவில் Thanksgiving day. எனக்கு அடித்தது யோகம். நான்கு நாட்கள் விடுமுறை. இன்று மாலை unstoppable படம் செல்ல இருக்கிறேன். உங்களை இப்படி உசுப்பேத்துவதில் ஒரு சின்ன மகிழ்ச்சி. வாழ்க அமெரிக்கா) நம் மகளிர் அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்திடம் மோதும் ஆட்டத்தை சற்று முன் காணும் வாய்ப்பு கிட்டியது.
பெண்கள் கபடி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறைதான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை உடையில் தேவதைகள் போல் களத்தில் வலம் வந்தனர் நம் நாட்டு பெண்கள் . ஆரம்பம் முதலே நமது ஆதிக்கம்தான். முதல் பாதியில் 17-7 எனும் புள்ளிக்கணக்கில் முன்னணி பெற்றது இந்தியா. நேற்று நடந்த அரை இறுதியில் ஈரானுடன் முட்டி மோதிய இந்தியா, இன்று தாய்லாந்தை சர்வ சாதாரணமாக வென்றது. இறுதியில் 28-14 எனும் புள்ளிக்கணக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தனர் மகளிர் அணியினர். வெற்றிக்கு பாடுபட்ட சனா, தேஜா, பூஜா, கல்யாணி, கவிதா, மம்தா, மனிஷா, தீபிகா உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்துவோம்!!
.....................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
twitter id - nanbanshiva.
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites
2 comments:
சனா, தேஜா, பூஜா, கல்யாணி, கவிதா, மம்தா, மனிஷா, தீபிகா உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்துவோம்!!
கவிதா என்கிற பெயரைத்தவிர மற்ற பெயர்கள்;எல்லாம் எனக்கு நடிகைகளை நியாபகபடுதுகிறது....புத்தி எனக்கு எங்க போவுது பாருங்க
பெண்கள் கபடி அணிக்கு வாழ்த்துக்கள்.பதிவர்கள் பெரும்பாலும் கிரிகெட்டை கையில் எடுக்கும்போது நீங்கள் கபடி குறித்து பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்
Post a Comment