CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 27, 2010

asian gamesஆசிய விளையாட்டு போட்டி:

                                                     எவனா இருந்தா எனக்கென்ன! 

நேற்று  நடந்த 75 கிலோ  குத்துச்சண்டை பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விஜேந்திர சிங், அப்போஸ் எனும் உஸ்பெகிஸ்தான் வீரரை எதிர்கொண்டார். அப்போஸ் உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம சிங்கம் விட்ட சரமாரி குத்தில் 7-0 என்று பரிதாபமாக தோற்றார் அப்போஸ். காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் மட்டுமே வென்ற விஜேந்திர சிங், இந்த முறை தங்கத்தை தட்டி விட்டார்.  

                                                        அனுப் மற்றும் அவனி 

ரோல்லர் ஸ்கேடிங் போட்டியில் எவரும் எதிர்பாரா வண்ணம் இரு வெண்கலங்களை வென்றார் அனுப் குமார். தனிநபர் பிரிவில் ஒன்றும், ஜோடி ஆட்டத்தில் அவனியுடன் ஒன்றும் வென்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டு போட்டிக்கு இவர்களை முதலில் அனுப்பும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை. ஆனால் இறுதியில் முடிவு செய்து அனுப்பினர். அது சரித்திரமாகி விட்டது! 

                                                           சீறிப்பாய்ந்த சிட்டுகள்! 

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ப்ரீஜா வெள்ளியும், கவிதா வெண்கலமும் வென்று பெருமை சேர்த்தனர். 

ஒட்டுமொத்தமாக 64 பதக்கங்களை வென்றதன் மூலம்,  1982 ஆம் ஆண்டு வென்ற 57 பதக்கங்கள் எனும் சாதனையை முறியடித்துள்ளது இந்தியா. மொத்தம் 14 தங்கங்களை வென்று முந்தைய சாதனையான 15 தங்கங்களை (1951 போட்டி) தாண்ட முடியாமல் போனது நம் தேசத்தினால். 

உலக மக்கள் தொகையில் 2 ஆம் இடத்தில் இருக்கும் நாம் வென்றது 14 தங்கங்கள். ஆனால் முதல் இடத்தில் இருக்கும் சீனாவோ இதுவரை 197 தங்கம் வென்று விண்ணை முட்டியுள்ளது. மொத்தம் 412 பதக்கங்கள். நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை பார்த்தால் வருத்தமே மேலிடுகிறது. காமன்வெல்த் போட்டி போல் ஊழல் புரிபவர்கள் இருந்தால் சீனாவின் அருகில் செல்வது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அதையும் மீறி இவ்வளவு பதக்கங்களை வென்ற நம் போட்டியாளர்களை உச்சி முகரவே வேண்டும். பதக்கம் வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் மிகச்சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து இந்த நிலைக்கு வந்தவர்கள். சரியான உபகரணங்கள் தராமல், பொருளுதவி தராமல், தகுந்த நேரத்தில் கவுரவிக்காமல் இந்திய அரசு பாரபட்சம் காட்டியதையும் மீறி இவர்கள் சாதித்தது நம் தேசத்தின் மீதுள்ள பற்றே காரணம் அன்றி வேறில்லை. இனியாவது அரசு கேனைத்தனமாக கிரிக்கெட்டை அரவணைப்பதை நிறுத்த வேண்டும். இந்தியா அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்றால் மாநில விடுமுறை அளிப்பது, பல அரசு விருதுகளை கிரிக்கெட் வீரர்களுக்கே தருவது போன்ற செய்கைகளை நிறுத்தியே தீர வேண்டும். 

                                                                                   
 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மாபெரும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துவோம்!  மீண்டும் சந்திப்போம்! BYE!
...........................................................................................................
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com 


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

     

Friday, November 26, 2010

புதிய செய்திஆசிய விளையாட்டு போட்டி:

சற்று முன் நடந்த பெண்களுக்கான 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா கஜகஸ்தானை வீழ்த்தி தங்கத்தை தட்டி சென்றது. மந்தீப், மன்ஜீத், அஸ்வினி, ஷைனி ஆகிய நால்வரும் ஏற்கனவே டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்கள்.  2006 ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்தியாவே தங்கம் வென்றிருந்தது. இன்று இந்தியா தங்க வேட்டை ஆடி வருகிறது. நமக்கு கிடைத்த 13- வது தங்கமாகும் இது. 

                                                       
அஸ்வினி நேற்று தனி நபர் தங்கத்தை வென்றிருந்தார். இது இவருக்கு கிடைத்த அடுத்த பெருமையாகும். அடிச்சி தூள் கிளப்புங்க பெண்களே..!

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websitesகபடி-3

ஆசிய விளையாட்டு போட்டி:


சற்று முன் இந்தியாவிற்கு தங்கம் பெற்று தந்த மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கத்தை வென்றுள்ளது. சில நிமிடங்களுக்கு முன் நடந்து முடிந்த இறுதி போட்டியில் இந்தியா ஈரானை 37-20  என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. முதல் பாதியில் 24-3 என  முன்னணியில் இருந்தோம் நாம். இந்திய கேப்டன் ராகேஷ் குமாரை முரட்டுத்தனமாக மோதினர்  ஈரான் வீரர்கள். அதனால் ஸ்ட்ரெச்சரில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவர். மகளிர் அரை இறுதியில் ஏற்கனவே ஈரானுடன் அடிதடியில் ஈடுபட்டு வெற்றி பெற்ற நம் மகளிர் அணி, ஆண்கள் அணிக்காக தொடர்ந்து உற்சாக குரல் எழுப்பினர் அரங்கில். ஈரானிய மகளிர் அணியும் அவ்வாறே. நல்லவேளை, போட்டியில் அடித்து கொண்டதை போல அரங்கில் அடித்து கொள்ளவில்லை இரு மகளிர் அணியினரும். ஆட்ட முடிவில் உடல்நலம் தேறி வெற்றி விழாவில் கலந்து கொண்டார் கேப்டன் ராகேஷ்.

                                                      
1990 ஆம் ஆண்டு பீஜிங் ஆசிய விளையாட்டு போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் இதுவரை இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இதுவரை நடந்த ஐந்து ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளனர் நம் வீரர்கள்(1990,94,98,2002 மற்றும் 2006). இது ஆறாவது தங்கமாகும். அதுமட்டுமா, இந்தியா இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பை வென்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 58-24 எனும் புள்ளிக்கணக்கில் வெற்றி கொண்டது நம் அணி. அந்த போட்டியில் எடுக்கப்பட்ட படம் கீழே:

                                                                
                                                  
 கபடியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நாள் தொலைவில் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது!  இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஜக்தீப், சோனு, ஜஸ்மேர், சமேர்ஜெத், ராகேஷ் மற்றும் ஆட்ட நாயகன் அனுப் அனைவைரையும் வாழ்த்துவோம்!

                                                               கோச் பல்வான் சிங்!

இந்திய கபடி அணியின் கோச் பல்வான் சிங் போட்டி நடக்கும் முன் கூறியது: "கபடி எனும் வார்த்தையை கூறுகையில் நுரையீரல், இதயம் மற்றும் வயிற்று பகுதிகள் பலம் பெறுகின்றன. எங்கள் முக்கிய எதிர் அணிகள் பாகிஸ்தான் மற்றும் ஈரான். நாங்கள் கண்டிப்பாக தங்கம் வெல்வோம்". சொன்னதை செய்த பல்வான் சிங்கை தோளில் தூக்கி பிடித்து அரங்கை சுற்றி வந்தனர் நம் வீரர்கள்! வெற்றி முரசு கொட்டட்டும்! இந்தியா உலகை ஆளட்டும்!           

........................

என் மற்றொரு பதிவகம் - nanbendaa.blogspot.com
twitter id - nanbanshiva                    
                              
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

                        

கபடி - 2


ஆசிய விளையாட்டு போட்டி:
இன்று விடுமுறை தினம் என்பதால்(அமெரிக்காவில் Thanksgiving day. எனக்கு அடித்தது யோகம். நான்கு நாட்கள் விடுமுறை. இன்று மாலை unstoppable படம் செல்ல இருக்கிறேன். உங்களை இப்படி உசுப்பேத்துவதில் ஒரு சின்ன மகிழ்ச்சி. வாழ்க அமெரிக்கா)  நம் மகளிர் அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்திடம் மோதும் ஆட்டத்தை சற்று முன் காணும் வாய்ப்பு கிட்டியது. 

                                                                                     
பெண்கள் கபடி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறைதான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை உடையில் தேவதைகள் போல் களத்தில் வலம் வந்தனர் நம் நாட்டு பெண்கள் . ஆரம்பம் முதலே  நமது ஆதிக்கம்தான். முதல் பாதியில் 17-7 எனும் புள்ளிக்கணக்கில் முன்னணி பெற்றது இந்தியா.  நேற்று நடந்த அரை இறுதியில் ஈரானுடன் முட்டி மோதிய இந்தியா, இன்று தாய்லாந்தை சர்வ சாதாரணமாக வென்றது. இறுதியில்  28-14 எனும் புள்ளிக்கணக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தனர் மகளிர் அணியினர். வெற்றிக்கு பாடுபட்ட  சனா, தேஜா, பூஜா, கல்யாணி, கவிதா, மம்தா, மனிஷா, தீபிகா உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்துவோம்!! 

இவ்வீராங்கனைகள் பதக்கம் பெரும் காட்சியை கண்டேன். மற்ற தேசத்தவர் பார்ப்பதற்கு ஒரே உருவ ஒற்றுமையுடன் இருக்க, நம் அணியினர் ஒவ்வொருவரும் உயரம், நிறம், உடல்வாகு ஆகியவற்றில் வேறுபட்டு இருந்தனர். வேற்றுமையில் ஒற்றுமை என்று சும்மாவா சொன்னார்கள். இந்தியா.. இந்தியாதான்! 
.....................................................................................

என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
twitter id - nanbanshiva.


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites


    

asian games 2010

ஆசிய விளையாட்டு போட்டி:

நேற்று நடந்த போட்டிகளில் மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றது இந்தியா. 400M தடை ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் அஸ்வினி சிதானந்தாவும், ஆண்கள் பிரிவில் ஜோசப் ஆப்ரஹாமும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.  சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 4*400 ரிலே பிரிவில் தங்கம் வென்றிருந்தார். கர்நாடகாவில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த வீராங்கனை. ஐந்து வயதிலேயே வெற்றிகளை குவிக்க ஆரம்பித்த அஸ்வினியின் திறமையை கண்ட அவர் தந்தை சிதானந்தா, வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து தன் மகளின் பயிற்சிக்கு வழி அமைத்து கொடுத்தார். பெங்களூரில் உள்ள தென்னக ரயில்வேயில் டிக்கெட் விற்பவராக இருக்கும் அஸ்வினி ஆசிய விளையாட்டு போட்டிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்த போது 45 நாட்கள் வேலைக்கு செல்ல இயலவில்லை. இருப்பினும் மேலிடம் அவரை ஊக்குவித்து அந்த மாத சம்பளத்தையும் அவருக்கு அளித்துள்ளது. அந்த முயற்சி வீண் போகவில்லை. தடை ஓட்டத்தில் தடை இன்றி தொடரட்டும் அஸ்வினியின் ஆட்டம்!


                                             தங்க அறுவடை செய்த விவசாயி மகள்!
          

400M தடை ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜோசப். தேசிய சாம்பியனாக திகழும் இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று நடந்த போட்டியில் மயிரிழையில் ஜப்பான் வீரரை வென்று தங்கத்தை தட்டி சென்றார் ஜோசப். இப்பிரிவில் இந்தியா வென்ற முதல் ஆசிய தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


                                                   தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்!


குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்தவர் ஹரியானாவை சேர்ந்த 18 வயது இளம் வீரர் விகாஸ் க்ரிஷன். 1998 ஆம் ஆண்டு டிங்கோ சிங்கிற்கு பிறகு குத்துச்சண்டையில் இந்தியா தங்கம் வென்றதே இல்லை. அதை இந்த வெற்றியின் மூலம் சாதித்தார் இவர். 60  கிலோ லைட் வெயிட் போட்டியில் சீன வீரருடன் ஆக்ரோஷமாக மோதினார். சொந்த நாட்டில் சீன மக்களின் பெருத்த ஆதரவுடன் ஆடிய க்விங், பல முறை விகாஸிடம் தவறாக நடந்து கொண்டார். கீழ்த்தரமான ஆட்டமுறையை கையாண்டார் க்விங். எனினும் விகாஸ் 5-4 எனும் கணக்கில் தங்கம் வென்று வெற்றிக்கொடி நாட்டினார். முக்கியமான விஷயம், சீனியர் பிரிவில் இது இந்த இளம் புலியின் முதல் சர்வதேச போட்டியாகும். சென்ற வருடம்  நடந்த இளைஞர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார் இவர். இந்திய பாக்சிங் வட்டத்தில் இவரின் செல்லப்பெயர் "மிஸ்டர் கூல்". ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நாள் தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள் விகாஸ்!

                                                               இடியை இறக்கும் அடி!

இன்று நடக்கவிருக்கும் குத்துச்சண்டையில் இந்தியா தங்க வேட்டையை நோக்கி களம் இறங்க உள்ளது. ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் உட்பட. கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இன்று இந்தியா இறுதிப்போட்டியில் மோத உள்ளது. வெல்லட்டும் நம் தேசம்!
............................................................


என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com 
twitter id - nanbanshiva

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

கபடிஆசிய விளையாட்டு போட்டி:

வீரமங்கை தீபிகா! 
அமெரிக்காவில் Thanksgiving day என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் இந்திய வீரர்கள் பங்கேற்ற அனைத்து போட்டிகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி டி.டி. ஸ்போர்ட்ஸ். நேற்று நடந்த மகளிர் கபடி அரை இறுதியில் இந்தியா மற்றும் ஈரான் மோதிய ஆட்டத்தில் அனல் பறந்தது. பொதுவாக மகளிர் போட்டிகள் சச்சரவு இன்றியே நடக்கும். ஆனால் நேற்று இரு அணியினரும்  அடிதடி வரை சென்று விட்டனர். இந்த பெண்களை சமாளிக்க ஆண் நடுவர்கள் திணறித்தான் போயினர். முதலில் சற்று பின் தங்கிய இந்தியா, பிறகு சமமான புள்ளிகளை பெற ஆரம்பித்தது. இந்தியாவின் தீபிகா பயங்கர கோபத்துடன் எதிரிகளை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் தன் தொடையை தட்டி அவர்களை வம்புக்கு இழுக்க, அரங்கில் கரவொலி அடங்க நேரமானது. உச்ச கட்டத்தில் இரு அணியும் தல 22 புள்ளிகளை பெற்றிருந்தன. ஈரான் வீராங்கனை இந்தியா எல்லைக்குள் நுழைந்து தீபிகாவை கன்னத்தில் அறைய, தீபிகா அவரின் முடியை பற்றி இழுக்க, கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியானது அரங்கம். இறுதியில் 23-22 எனும் புள்ளி கணக்கில் இந்தியா வெற்றியை தட்டி சென்றது. அதிர்ச்சியில் ஈரான் வீராங்கனைகள் அரங்கில் அழுது கொண்டே இருந்தனர். கமர்சியல் படம் தோற்றது போங்கள்! செம விறுவிறுப்பு.

                                                            
இன்று நடக்கும் இறுதி போட்டியில் தாய்லாந்தை சந்திக்கிறார்கள் நமது மகளிர் அணியினர். ஆண்கள் அரை இறுதியில் இந்தியா ஜப்பானை 52-17 எனும் புள்ளிக்கணக்கில் துவம்சம் செய்து இறுதியில் நுழைந்தது. ஈரானுடன் தங்கப்பதக்க போட்டி இன்று நடக்கிறது. இரு பிரிவிலும் நம் அணி தங்கம் வெல்ல வாழ்த்துவோம்!
.....................................................

என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
twitter id - nanbanshiva

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites
              

Tuesday, November 23, 2010

சோம்தேவ்

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சோம்தேவ், சற்று முன் நடந்த ஒற்றையர் இறுதி போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். உஸ்பெகிஸ்தானை சேர்ந்த  டெனிஸ் இச்டோமின்னை 6-1 6-2 எனும் நேர் செட்டில் துவம்சம் செய்து வென்றார் சோம்தேவ். உலக தர வரிசையில் 40-வது இடத்தில் இருக்கும் டெனிஸ்,  94-வது இடத்தில் இருக்கும் நம் சிங்கக்குட்டி சோம்தேவ்வின் ஆட்டத்திற்கு ஈடு குடுக்க இயலாத கோபத்தில் பலமுறை மட்டையை தரையில் வீசி உரக்க கத்தினார். அந்தோ பரிதாபம். டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பல ஆண்டு காலம் சோபிக்காமல் இருக்கும் இந்தியாவிற்கு பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றியுள்ள இந்த இளம் வீரரை வாழ்த்துவோம்!


                                                               ராக்கெட் ராஜா!

நேற்று தங்கம் வென்ற சனம்,சோம்தேவ்!

வெற்றிக்கொடி கட்டு...!

                                                          டென்ஷன் மன்னன் டெனிஸ்!

                                                        
..........................................................................

என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ.டி. nanbanshiva
..........................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websitesMonday, November 22, 2010

தங்கம் வென்ற சிங்கங்கள்!

ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற சிங்கங்கள்!

சற்று முன் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் மற்றும் சனம் சிங்க் சீன ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றனர். தொடரட்டும் வெற்றிக்கூட்டணி! வாழ்த்துவோம் நம் சிங்க குட்டிகளை!

                                                                     சோம்தேவ்
                                                                  சனம் சிங்க்
                                                                
                                                              
                                                  
..................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ. டி. -  nanbanshiva
.................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

Sunday, November 21, 2010

நகரம்

மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!

                                                          
ஸ்டார்ட்டர்:
நல்ல படங்கள் எந்த மொழியில் இருப்பினும் அதை எப்படியாவது பார்த்து விடும் எனக்கு, எப்போதாவது ஒரு கமர்சியல் சினிமா பார்க்கத்தோன்றும். அப்படி சென்றதுதான் நகரம் மறுபக்கம். தலைநகரமான சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று மதியம் பார்த்தேன். தயாரிப்பாளர் குஷ்பு குழந்தைகள் பட்டாளத்துடன் படம் பார்க்க வந்திருந்தார். சுந்தர். சி மிஸ்ஸிங். இடைவேளையில் வெளியே வந்து போன் பேசிக்கொண்டிருந்த குஷ்புவை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். முக்கியமான விஷயம் யுவர் ஆனர், நகரம் படம் தலைநகரம் படத்தின் தொடர்ச்சி அல்ல. தமிழ் சினிமா வரலாற்றில் எடுக்கப்பட்ட நீ(ல)ளமான 'லிப் டு லிப்' காட்சியில் சுந்தர் சி அனுயா நடித்த படம் இது என்று சில பத்திரிக்கைகள் பற்ற வைத்ததை நம்பி படத்துக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு பொட்டு வைத்து பொங்கல் தருவார்கள். அப்படி எதுவும் இல்லை பாஸ். ஒரே ஒரு பருக்கை மட்டும்தான். Exactly 2 seconds liplock inside a car between சுந்தர் அண்ட் அனுயா.  

சாப்பாடு:
சென்னை யானைக்கவுனி (Elephant Gate) ஏரியா ரவுடிதான் கேட் செல்வம்(சுந்தர் சி). திருந்தி வாழ ஆசைப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வரும் செல்வம் போலீஸ் நண்பன் சக்கரைபாண்டிக்காக(போஸ்) மீண்டும் சில தவறுகளை செய்ய நேரிடுகிறது. தன் காதலியுடன் இந்த தொழிலை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக நினைக்கும் செல்வம் என்ன ஆகிறான் என்பதுதான் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸை பார்த்தால் மூன்றாம் பாகம் வந்தாலும் வரலாம். தலைப்பு: மாநகரம்(!).

                                                    
                                                                      
இந்த படத்திலும் தலைநகரம் படம் போல ஒரு தாத்தா தாதா. படத்தில் அவர் பெயர் 'பாய்' (ஸ்ரீநிவாசன்). சில மீடியம் மற்றும் குட்டி தாதாக்கள் கூட பவனி வருகின்றனர்.  தலைநகரத்தில் தாத்தா தாதாவாக வந்த ஜூடோ ரத்னத்தின் நடிப்பு வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் இருந்தது. ஆனால், இதில் ஸ்ரீநிவாசன் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். நடிப்புக்கான ஸ்கோப் கம்மி. நாயகியாக வரும் அனுயா ஓரளவு நடித்திருக்கிறார். வடிவேலுவின் நகைச்சுவை இரண்டு இடங்களில் தியேட்டரை அதிர வைக்கிறது. சுந்தரை "என் ஏரியால வந்து பாரு" என வம்புக்கு இழுக்கும் காட்சி சிரிக்க வைக்கிறது. அதுபோல், இரவில் அடிப்பொடிகளுடன் திருட செல்கிறார். போலீஸ் வளைத்து பிடிக்க, நாம் திருட வந்தது போலீசுக்கு எப்படி தெரியும் என்று அவர் கேட்கிறார். "இது உங்களுக்கு 100 வது திருட்டு, அதனால் ஏரியா முழுக்க போஸ்டர் ஓட்டினோம்" என அடியாட்கள் போஸ்டரை காட்டுகிறார்கள். போஸ்டரில் "100 வது திருட்டை புரிய வரும் திருடர் குல திலகம் வாழ்க! திருடும் இடம், நாள், நேரம். அனைவரும் வருக!" எனும் வார்த்தைகள் அரங்கில் விசில் பறக்க வைக்கின்றன. நாகேஷ், ரஜினிக்கு பிறகு குழந்தைகளின் மனதை கவர்ந்த கலைஞன் வடிவேலு என்பதற்கு அரங்கில் ஒலிக்கும் சிரிப்பு சத்தமே சாட்சி. "என் பேரு கிருஷ்ணவேணி...நான் கல்கத்தாவின் ராணி" எனும் க்ளப்  பாடல் கிளாமர் கிக். மற்ற எந்த பாடலும் மனதில் ஒட்டவில்லை. தமன்...Long way to go!  
                                                                              
சுந்தர் சி, போஸ் இருவரின் நடிப்பும் நன்றாக உள்ளது. பில்ட் அப் இல்லாமல் பொருத்தமான ரோலில் இருவரும் நடித்துள்ளனர்.  'மல்டிபிள் கேங்' வந்து போகும் கதையை குழப்பாமல் இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முத்திரை பதித்த வெகு சில நடிகர்களில் போஸ் குறிப்பிடத்தக்கவர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது நகரம். இப்படிப்பட்ட நடிகரை சிவாஜி படத்தில் சரியாக பயன்படுத்தாமல் இருந்தது வருத்தமே. சுமன் ரோலில் போஸ் இருந்திருந்தாலும் அது நன்றாகவே பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் போஸ் வெங்கட்டுக்கு என்று ஒரு சிம்மாசனம் தயாராகி விடும் நாள் தொலைவில் இல்லை. 


                                                           
என்னை பொறுத்தவரை வித்யாசமாக படம் எடுக்கிறோம் என்று சிலர் உலக சினிமாவை உருவி நமக்கு அல்வா குடுப்பார்கள் அல்லது குடும்ப படம் எடுக்கிறோம் என்று சொல்லி நமக்கு பாடம் எடுப்பார்கள்...படம் எடுக்காமல். அதற்கு பதில் ஹரி, வெங்கடேஷ் படங்கள், நகரம் போன்ற மசாலா படங்கள் எவ்வளவோ மேல் என்பது என் கருத்து. அந்த வகையில் நகரம் பாஸ் ஆகி விடுகிறது. ஆனால்.. 'தலைநகரம்' பார்த்தவர்களுக்கு அதன் பாதிப்பு இந்த படத்தில் பெருமளவு இருந்ததை உணர முடியும். தலைநகரம் கிளைமாக்ஸ் காட்சி மிக நன்றாக படம் ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் நகரத்தில் யூகிக்கும்படியாக உள்ளது. 

                                                                               
சில காட்சிகள் நகரத்தில் நம்பும்படியாக (இல்லவே) இல்லை. பெரும்படை சூழ இருக்கும் 'பாய்' தாதா, சுந்தர் சி அழைத்ததும் தனியாக வெளியே வந்து போஸ் கையால் சுடப்படுவது, ஹோட்டலில் நடக்கும் கலவரத்தை ஹோட்டல் ஊழியர்கள் யாரும் கேள்விப்படாமல் இருப்பது போன்ற காட்சிகள். முக்கியமாக என் கடுப்பை கிளப்பிய காட்சி.. ஹாஸ்பிட்டலில் போஸை சந்திக்க வரும் சுந்தர் சி, போஸின் தோட்டாக்களை துப்பாக்கியில் இருந்து எடுக்கும் காட்சி. இன்னும் எத்தனை வருஷம் இந்த மாதிரி எடுப்பீங்க சாமியோ.. தன் துப்பாக்கி தோட்டாக்கள் 'சுடப்படுவதை' கூட அறியாத போலீஸ் என்ன போலீஸோ? அதுபோல் ஒரு காட்சியில் போஸ் சுந்தர் சி-யை சிறையில் அடைக்க அப்துல்லா எனும் அதிகாரியிடம் யோசனை சொல்லிக்கொண்டு இருப்பார். இதை போலீஸ் வண்டியில் உள்ள கேமரா மொபைல் இதை ரெகார்ட் செய்து கொண்டு இருக்கும். ஆனால் இந்த காட்சி நடக்கும் களமோ....பல ஊழியர்கள் உரக்க சத்தம் எழுப்பி போராட்டம் செய்து கொண்டிருக்கும் வீதி. இந்த வீடியோவை பிறகு ஒரு காட்சியில் போஸிடம் காட்டுவார் அப்துல்லா. அதில் போஸ் பேசிய வார்த்தைகள் மட்டும் கேட்கும்....ஊழியர்களின் போராட்டக்குரல் காணாமல் போய் விடும். எப்பூடி? என்னவோ போங்க. படத்தில் எனக்கு பிடித்த காட்சி... ஹோட்டலில் நடந்த  சண்டையில் தன் முகம் கேமராவில் பதிவாகி இருக்கும் என்பதால் போஸ் ஹோட்டலில் நுழைந்து கம்ப்யூட்டரில் பதிவான காட்சிகளை அழித்துவிடுவார். ஆனால் அடுத்த காட்சியில் அப்துல்லா எனும் அதிகாரி போஸிடம் சொல்லும் வசனம் "நீங்கள் ஹோட்டல் அறையில் அந்த காட்சிகளை அழிக்கையில், அந்த அறையில் உள்ள கேமரா அதை படம் பிடித்து விட்டது".  சூப்பர் சுந்தர் சி. 
                                                     
                                                                                                       
தயாரிப்பு குஷ்பூ என்பதால் படம் முழுக்க பல சின்னத்திரை நடிகர்கள். பாவம், நாயகியாக வெள்ளி மற்றும் சின்னத்திரையில் கலக்கிய நளினி ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். இந்த மாதிரி 'நல்ல ரவுடி' படங்களை பார்க்கும்போது தோன்றுவது....இன்னும் எத்தனை வருடங்கள் தமிழ் சினிமா, நாயகனை நகர ரவுடி, டவுன் ரவுடி, கிராமத்து ரவுடி, குக்கிராமத்து ரவுடி என திரிய வைக்கப்போகிறது. அது எப்புடித்தான் 'செக்க செவேல்'  நாயகிகளுக்கு இந்த ரவுடி நாயகர்களை மட்டும் பிடிக்கிறதோ? என்ன மாதிரி ஒழுங்கா வேலைக்கு போய் சம்பாதிக்கும் பசங்களையும் கொஞ்சம் பாருங்க மேடம். ஏம்பா, ரவுடியா வர்ற ஹீரோ.... நீங்க எதுக்கு ஷேவ் பண்ண அடம் புடிக்கிறீங்க. தலையாவது ஒழுங்கா வாருங்கப்பா. எனக்கு தெரிஞ்சி இந்த கால ரவுடிங்க எல்லாம் ரீபாக், அடிடாஸ் அப்டின்னு டீ ஷர்ட் போட்டுட்டு கலக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா அந்த கட்டம் போட்ட சட்டைய போட்டுட்டு அலையறீங்க. அப்... அப்.... அப்டேட். ஒரு காலத்துல வில்லன் பண்ண வேலைய எல்லாம் இப்ப நீங்க பண்ண ஆரம்பிச்சிடீங்க. அதுதான் கொலைகூட செய்ற நாயகன்னு நடிக்க முடிவு பண்ணியாச்சே, அதுக்கப்புறம் எதுக்கு "நான் நல்லவன். இந்த சமுதாயம்தான்..." அப்டின்னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டு ஓட்டுறீங்க. போதும்.. ரீலு அந்து போச்சி. படத்தில் ஹீரோயிசம் இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை என்பதெல்லாம் சரி. ஆனால் இவ்விரண்டும் இல்லாமல் இருந்தாலே அது நல்ல படம் எனும் கருத்து  சமீப காலமாக உலா வருகிறது. நல்லா இருக்கே நியாயம். மொத்தத்தில் மசாலா பட ரசிகர்களை, குறிப்பாக 'தலைநகரம்' பார்க்காதவர்களை ஏமாற்றாது இந்த நகரம்.  

நகரம்....... 'தலைநகரத்தின்' ஒண்ணு விட்ட தம்பி. 

ஊறுகாய்:
சென்னை சத்யம் தியேட்டருக்கு செல்லும் நண்பர்களே.. சத்யம் தியேட்டர் மாதம் ஒரு முறை வெளியிடும் 'சிம்ப்ளி சத்யம்' எனும் இதழை காண்டீனில் கேட்டு பெறுங்கள். 120 ருபாய் டிக்கட் குடுத்து படம் பார்க்கும் நமக்கு, இந்த புத்தகம் ஒரு போனஸ். தரமான அச்சு. குறைந்தபட்சம் 30 ரூபாய் மதிப்பு இருக்கும். சினிமா ரசிகர்களை கண்டிப்பாக கவரும். மீண்டும் சந்திப்போம். நன்றி! 
......................................
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ.டி. nanbanshiva
......................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites

Friday, November 19, 2010

Asian Games-2ஆசிய விளையாட்டு போட்டி நடக்கும் Guangzhou நகரத்தின் அழகிய படங்கள்...உங்கள் பார்வைக்கு! 


Mazu sculpture 


Facelifted rural area of Shanwei
Honghai Bay Beach

Lotus Mountain Resort


A road circling a lake in Shanwei

Coastal scenery


Haifeng County

Guangzhou Opera HouseCanton Tower

Canton Tower
Thanks to: gz2010.cn.


                                                

Asian Games - 1                                                                     
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா  இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளது.  இந்த பெருமைக்கு சொந்தக்காரர்,  29 வயது ராணுவ வீரர் பஜ்ரங் லால் தகர். ஆசிய விளையாட்டு போட்டி சரித்திரத்தில் துடுப்பு போட்டியில் இந்திய வென்ற முதல் தங்கமாகும் இது. மூன்றாம் லேனில் துடுப்பை செலுத்திய பஜ்ரங், மொத்த போட்டி தூரமான 2000 மீட்டரிலும் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்து, இறுதியில் 7 நிமிடம் மற்றும் 4.78 நொடிகளில் வெற்றிக்கோட்டை கடந்து இந்த சரித்திரத்தை படைத்திருக்கிறார்.  இவர் ஏற்கனவே சென்ற ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். 2000 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டு போட்டியில்  துடுப்பு போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டிருந்தார் பஜ்ரங் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                  

வெற்றி குறித்து பஜ்ரங் -  "சென்ற முறை வெள்ளி வென்றதை தாண்டி இந்த முறை தங்கம் வெல்ல நான்கு ஆண்டுகள் கடும் முயற்சி செய்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது".

சாதனையில் முதல்வனாக இருக்கும் பஜ்ரங்கிற்கு வாழ்த்துகள்!Wednesday, November 17, 2010

சோசியல் நெட்வொர்க்'சோசியல் நெட்வொர்க்'  ஸ்டார்ட்டர்:                                                               
அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி இருக்கும் படம்தான் 
சோசியல் நெட்வொர்க் அக்டோபர் 1- ஆம் தேதி வெளியான கொலம்பியா பிக்சர்சின் ''. Facebook-ஐ நிறுவிய ஹார்வர்ட் பல்கலை மாணவன் Mark Zuckerberg) பற்றிய உண்மை படம்தான் இது. பட நாயகனாக எய்சென்பெர்க். இயக்கம்...Fight Club, The curious case of Benjamin Button போன்ற படங்களை இயக்கிய David Fincher. திங்கள் அன்று மதியம் சத்யம் தியேட்டரில் படம் பார்த்தேன். என் மற்றொரு பதிவகமான nanbendaa.blogspot.com- இல் வெளியிட்ட பதிவை சில மாற்றங்களுடன் மீண்டும் இங்கு இட்டுள்ளேன்.
                                              
      

சாப்பாடு:                                          
நாயகன் ஜெஸ்ஸே ஆங்கிலம் பேசும் வேகத்தை கண்டு மிரண்டு விட்டேன். செம ஸ்பீட். படு அசால்ட்டான நடிப்பில் ஜெஸ்ஸே கை தட்டுகளை அள்ளுகிறார். படத்தை உன்னிப்பாக பார்த்தால்தான் வசனங்கள் புரியம். அருமையான திரைக்கதை. படம் முழுக்க வசனங்கள்தான். ஆனால் F-1  காருக்கு இணையாக பறக்கிறது படம். தியேட்டரில் முழுக்க இளம் பெண்கள் கூட்டம் தான். எல்லாம் Facebook விசிறிகள் போல. ஹார்வர்ட் பல்கலையை மையமிட்டு 2003- ஆம் வருடத்தில் இருந்து தொடங்குகிறது படம். நாயகனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவனை காதலி புறக்கணிக்கிறாள். அந்த கோபத்தில் தன் அறைக்கு வருகிறான் நாயகன் ஜக். ஹார்வர்டின் database-ஐ ஹாக் செய்து சக மாணவர்களின் படங்களை டவுன்லோட் செய்கிறான். தனது இணைய பக்கம்  'facemash' - இல் ஹார்வார்ட் பெண்களில் யார் அழகு என ஓட்டெடுப்பு நடத்துகிறான். அது சக மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெறுகிறது. ஆனால், ஹார்வர்டின் நெட்வொர்க் கிராஷ் ஆகிறது. அதனால் அவனை நிர்வாகம் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்கிறது. 

அசத்தல் இரட்டை வேடத்தில் ஹாம்மர்.                                                            
ஜக்கின் திறமையை அறிந்த பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் கமேரூன், டைலேர்(இரட்டையர்கள்) மற்றும் திவ்யா(நம்ம நாட்டு திவ்யாதான்) ஆகிய மூவரும் தங்களது சோசியல் நெட்வொர்க் சைட்டுக்கு கோடிங் எழுதுமாறு ஜக்கை கேட்கிறார்கள். அவனும் ஒப்பு கொள்கிறான். அதே சமயத்தில், அவனுக்கு ஒரு சிந்தனை. இதே போல தானும் சொந்தமாக ஒரு சோசியல் நெட்வொர்க் தளத்தை தொடங்கினால் என்ன?. தனது நண்பன் சவேரின் பண உதவியால் தொடங்கினான்.... அதுதான் இன்று உலகம் கொண்டாடும் Facebook. 

                                                  
ஹார்வர்டை தொடர்ந்து Facebook பல கல்விநிலையங்களில் புகழ்பெற தொடங்குகிறது. அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நுழைகிறான் பார்க்கர். பார்க்கர் வேறு யாருமல்ல... உலக புகழ் பெற்ற இசை தரவிறக்க தளமான Napster-ஐ கண்டுபிடித்தவன். நிறைய வழக்குகளை சந்தித்து நஷ்டத்தில் இருக்கும் பார்க்கர், ஜக்கை சந்திக்கிறான். ஜக்கின் நண்பன் சவேரை ஓரம் கட்ட சொல்கிறான். ஒரு கட்டத்தில் ஜக் மற்றும் பார்க்கர் இருவரும் லாபத்தில் தனக்கு சரியாக பங்கு தரவில்லை என வழக்கு பதிவு செய்கிறான் சவேர்.  அதே சமயத்தில், கதையின் ஆரம்பத்தில் வரும் ஹார்வர்ட் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் ஜக்கின் வளர்ச்சி பொறுக்காமல், Facebook தங்களது மூளை என்றும் அதை ஜக் திருடிவிட்டான் என்றும் வழக்கு பதிவு செய்கிறார்கள். இங்கிலாந்திலும் பல பல்கலைகழகங்களில் Facebook பெரும் வரவேற்பு பெறுவதை கண்டு அந்த மூவரும் தனக்கு எதிராக பல கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவதை எதிர்கொள்கிறான் ஜக். 

                                                      
 "500 மில்லியன் நண்பர்களை நீ பெற சில எதிரிகளையும் எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும்" என்பதுதான் கதையின் அடிநாதம். ஜக் சந்திக்கும் பிரச்சனைகள், அதை அவன் எதிர்கொள்ளும் விதம் பற்றி சொல்கிறது சோசியல் நெட்வொர்க். உலகின் பல சிறந்த விமர்சகர்களிடம் நல்ல பெயரை தட்டிச்சென்று  இருக்கிறது. அடுத்த வருடம் ஆஸ்காரில் Inception உடன் முட்டி மோத தயாராக இருக்கிறது.  நாயகன் எய்சென்பெர்க்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. படத்தின் நீளம் 121 நிமிடங்கள்.                                                    

                                                    
இந்த படத்தில் இரட்டையர்களாக வரும் வேடத்தை செய்திருப்பவர் Armie Hammer. இவரின் நடிப்புத்திறனை மெச்சுகிறார்கள் படம் பார்த்தவர்கள். ஒரே மனிதன்..இரட்டையர்கள் ஆக.. இரண்டு  personality, voice tone, attitude என பொளந்து கட்டி இருக்கிறார் மனிதர்.   


                                                    
இதோ, விமர்சகர்களின் பாராட்டுக்களில் இருந்து சில துளிகள்:

-The best movie ever made about e-commerce, as well as the Internet itself. David Fincher's The Social Network is a true masterpiece in American cinema. 


-Even if you've never logged on to Facebook, you can still get caught up in the way The Social Network looks at issues of friendship, rivalry, inspiration, and the cutthroat nature of business.


-Brilliantly directed, superbly written and impeccably acted, this is a hugely enjoyable, era-defining drama that's gripping, laugh-out-loud funny and ultimately moving -- it's also one of the best films of the year.


-David Fincher and screenwriter Aaron Sorkin have put together a well-acted, intelligent, and compelling film that merits accolades as one of the best films of 2010.


-The brilliance of Eisenberg's performance is that even when you want to slap his Zuckerberg silly you can't help but admire his creativity, his ambition and his almost religious dedication to the Internet's potential.


-This is the 2010 Oscar season's first drama to live up to the hype and expectations associated with it.


-Every aspect of the film, from Fincher's beautiful direction to Reznor's emotionally devastating score to each and every performance is absolutely stunning.


இந்த திரைப்படத்தை காணத்தவறாதீர்கள்! மீண்டும் சந்திப்போம். நன்றி! 

..................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ. டி. -  nanbanshiva
.................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites


                                                        

Monday, November 15, 2010

ஹர்பஜன்

இன்று அடித்த செம அடியின் மூலம்  8-ஆம் இடத்தில் விளையாடி BACK TO BACK சென்சுரி அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார் செம காரமான மிளகா 'பஜ்ஜி'.


                                
      இந்த சாதனையை தனது பேட்டிங் குரு சச்சினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் 'பஜ்ஜி'.
                                               

                                   
                                                         
......................................
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தாவது சொல்லிவிட்டு போங்கள். நன்றி!
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com  
.............................................                                                                                                  

Related Posts Plugin for WordPress, Blogger...