இப்பதிவர் சந்திப்பு நடக்க ஒற்றுமையுடன் செயலாற்றிய நண்பர்கள் பற்றிய
ஒரு தொகுப்பு:
முதல் யூத் பதிவர் சந்திப்பு சென்ற ஆண்டு
செப்டம்பர் மாதம் நடந்தது. அதற்கு ஆதரவு தந்த எங்கள் ஆசான்கள் கே.ஆர்.பி.செந்தில்,
கேபிள் சங்கர் இருவருக்கும் நன்றிகள் பல. அதில் பங்கேற்று புதிய பதிவர்களை
உற்சாகப்படுத்திய ஜாக்கி சேகர், யுவகிருஷ்ணா போன்ற முன்னணி பதிவர்களுக்கும்
மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறோம்.
சென்ற யூத் பதிவர் சந்திப்பில் கேபிள், சதீஷ், ஜாக்கி
மே 20, 2012 சென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்:
உணவு உலகம் சங்கரலிங்கம்
வீடு சுரேஷ்
‘தமிழ்பேரன்ட்ஸ்’ சம்பத்குமார்
ஆரூர் முனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
நக்கீரன்
பிரபாகரன்
நிகழ்ச்சி நடக்க உறுதுணையாய் இருந்தவர்கள்:
கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், உணவு உலகம் சங்கரலிங்கம், ஆரூர் முனா செந்தில், ‘தமிழ்பேரன்ட்ஸ்’ சம்பத்குமார், வீடு சுரேஷ், அஞ்சாசிங்கம் செல்வின்,
நக்கீரன், தமிழ்வாசி பிரகாஷ், ‘வள்ளல்’ சிராஜுதீன், ரஹீம் கஸாலி, அக்கப்போர் ராஜா மற்றும் வடசென்னை இளைய ஆதீனம் பிரபாகரன்.
பதிவர் சந்திப்பு குறித்து பல்வேறு
தளங்களில் செய்தி வெளியிட்ட நண்பர்கள், நேரில் கலந்து கொண்டவர்கள், சத்யம் டி.வி.,
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் சென்னை யூத் பதிவர்கள் குழு
சார்பாக நன்றிகள்.
மே 20 ஞாயிறு அன்று நடந்தேறிய சென்னை யூத் பதிவர்
சந்திப்பின் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பார்வைக்கு....
சிறப்பு விருந்தினர்கள் செல்வி.விஷாலினி, திரு.யோகநாதன், 'புதுவை இளைய ஆதீனம்' தம்பி
கோகுல்
சத்யம் டிவிக்கு யோகநாதன் அவர்களின் பேட்டி
நவீன கர்ணன் அப்துல்லா, தென்சென்னை ஆதீனம்
கேபிள் சங்கர்
"இந்த ஒபாமா பய ‘கால் மேல கால் போட்டு’
கொல்றான்யா’’ சலிப்புடன் போனை எடுக்கும் நக்கி மாமா.
வட சென்னை இளைய ஆதீனம் பிலாசபியின் கனடா ரசிகர்
ஒருவர் சென்னையில் உள்ள நண்பர் ராஜேஷிடம்(சிகப்பு டி ஷர்ட்) 1200 ரூபாய் சார்ஜ் செய்த சத்யம் தியேட்டர் கிப்ட்
கார்டை அளித்தார். பாருய்யா பிலாசபி பயபுள்ள என்னமா கலக்குது!!
வரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத்
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை
மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
யோகநாதன்: கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான
இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம்
வருகிறார். சென்ற ஆண்டு சி.என்.என். ஐ.பி.என். செய்தி சேனல் ‘ரியல் ஹீரோஸ்’ விருதை
இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
யோகநாதன் குறித்து சி.என்.என். ஐ.பி.என்.
வெளியிட்ட செய்திக்கான லிங்க்:
யோகநாதன் அவர்களை அன்புடன் வரவேற்கிறது சென்னை
யூத் பதிவர் சந்திப்பு குழு.
அடுத்த சிறப்பு விருந்தினர் செல்வி விஷாலினி
அவர்கள்:
பதினோரு வயதே நிரம்பிய இவருடைய ஐ.க்யூ. லெவல் 225. இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு
எடுக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ள தமிழ்மகள். விஷாலினி குறித்து உணவு ஆபீசர் தளத்தில்வெளிவந்த செய்திக்கான லிங்க்:
மாம்ஸ் விக்கியின் வலைத்தளத்தில் கீழ்கண்ட
பேஸ்புக் இமேஜ் இருப்பதை வீடு சுரேஷ் அவர்கள் கூற என்னவென்று எட்டிப்பார்த்தால் வெரி
குட் கிருஷ்ணன் எனும் நபரின் நியாயமான கேள்விக்கு அருவருக்கத்தக்க வார்த்தை பிரயோகங்களால்
அர்ச்சனை செய்திருந்தார் புளியங்கொட்டை ஒருவர்(தலைவனை புளியங்கொம்பு என்று சொன்ன
கட்சி அபிமானியை இப்படி அழைப்பதுதானே முறை). அவர் யாரென நீங்களே படத்தை கிளிக்
செய்து பார்க்க. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றும் இன்னும் சில
வருடங்களுக்கு சிப்ளிங்க்ஸ்(ஒடன் பிறப்புகள்) அலைய போவதை கண்டால்...ஐயோ பாவம்.
ஏதோ கெட்ட வார்த்தைகள்
இவர்களது கீ போர்டில் மட்டுமே டைப் ஆகும் என்கிற ரீதியில் குறிப்பிட்ட கழக
கண்மணிகள் எல்லை மீறுவதை அனுமதிக்காமல் நாகரீகத்துடன் வழக்கம்போல சாட்டையை சுழற்றி
அந்த காமடி பீஸ்களை பொளந்து கட்டுமாறு கட்சிசாரா நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
ரோட்டோர கடையில் வேலை
செய்யும் நாயகன்,அவனுடன் வேலை செய்யும்
சிறுவன்,வேலைக்கார பெண்ணின் தாயார்,பணக்கார வீட்டு பையன் மற்றும்
போலீஸ்காரர் என பலரது நடிப்பும் கச்சிதம். லேசாக கேமராவை ஆட்டுதல் மற்றும்
புதுப்புது இடங்களில் கேமராவை சொருகுதல் இவற்றை கண்டால்‘என்ன ஒரு ஒளிப்பதிவுடா’என்று சொல்லியே நாம்
பழக்கப்பட்டு விட்டதால் வழக்கம்போல ஹாட்ஸ் ஆப் விஜய் மில்டன்.
இது தவிர்த்து
பார்த்தால்....ரெகுலர் கமர்சியல் படங்களில் வருவது போல சிறு சண்டையில் நாயகனுக்கு
காதல் பூத்தல்,12வது பரீட்சை ஆரம்பிக்க சில நாட்களே
இருக்கையில் படுமொக்கையான டவுட்டை இன்னொரு ஹீரோ கீழ் வீட்டு பெண்ணிடம் கேட்டல், வெளிப்படையாக மொபைலில் அவளை
படம் எடுப்பது கூட தெரியாத பேக்காக அந்த பெண் பாடம் நடத்துதல்...அனைத்திலும் மேலாக
பாகவதர் காலம் முதல் பாலாஜி சக்திவேல் வரை காதல் இல்லாமல் படமே எடுக்க முடியாது
என்கிற மிகப்பெரிய பலவீனத்திற்கு ஆட்படுதல்...அட போங்க பாஸ். இதை உலக சினிமா என்று
வர்ணிப்பதெல்லாம் ஓவர். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சி என்று வேண்டுமானால்
சொல்லலாம்.
ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக புகார்
வந்ததை அடுத்து அமித் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பென்ட் செய்துள்ளது
பி.சி.சி.ஐ. இந்தியா என்ற பெயரை உடையில் தாங்கி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த
சூதாட்ட கும்பல் இப்போது சென்னை, மும்பை என கொடிபிடிக்கும் ரசிகர்களுக்கு மீண்டும்
ஒரு முறை மொட்டை அடித்து உள்ளது. அந்த அணி ஜெயிக்குமா? இந்த அணி ஜெயிக்குமா? என்று
பரபரப்பாக ஆட்டத்தை பார்த்த மகாஜனங்களே க்ளைமாக்ஸ் முன்பே முடிவு செய்யப்பட ஒன்று
என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. இன்னுமா இந்த ஆட்டத்தை நம்பிக்கிட்டே
இருக்கீங்க?
உதயநிதி, ஹன்சிகா என்று இரு மாபெரும் நடிப்பு புயல்களிடன் சிக்கி இயக்குனர் ராஜேஷ் மண்டை காய்ந்தாலும் சந்தானம் எனும் ஒத்தை ஆளை வைத்து ஓகே ஓகேவில் ஹிட் அடித்தார். விமல், சிவா, இளவரசு, சந்தானம் என்று பலர் இருந்தும் பெயர்பெற்ற நகைச்சுவை இயக்குனர் சுந்தர் சி ஒரு காட்சியில் கூட நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்க முடியாமல் செய்து விட்டார். அஞ்சலி டயலாக் பேசும் இடங்களில் தெலுங்கு வாசம் தூக்கல். விமல்...களவாணி நடிப்பு எங்கய்யா போச்சி? ஓரளவுக்கு சிரிக்க வைத்தாலும் சிவா இன்னும் சுறுசுறுப்பாக நடித்து இருக்கலாம். மிகவும் காசுவலான நடிப்பு எத்தனை நாளைக்கு பிரதர். சந்தானம் லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
பாடல்கள் எல்லாம் சுமாருக்கும் கீழ். தன் பழைய பாணி க்ளைமாக்ஸ் காட்சிகளை வைத்து ஒப்பேற்ற பார்த்து இருக்கிறார் இயக்குனர். காலம்
மாறிப்போச்சி சுந்தர் சார். காமடி சென்ஸ் நம்ம ஊர் ரசிகர்களுக்கு இப்பல்லாம் ரொம்ப
அதிகம். புதுசா ட்ரை பண்ணுங்க.
மேடம் ஆட்சி பவருக்கு
வந்து ஓராண்டு ஆனதை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் ப்ளட்டின் ப்ளட்டுகள். பேருந்து,
கரண்ட், பால் உள்ளிட்டவற்றின் விலைகளை ஏற்றி மேலும் அதிகம் சம்பளம் தரும் வேலைக்கு
சாமான்யர்களை ஓட வைத்த ஜெவுக்கு போடுங்கப்பா ஒரு ஜே. ஓராண்டு நிறைவை முன்னிட்டு
மேலும் விலைகளை ஏற்றினால் இன்னும் அதிகம் சம்பளம் தரும் கம்பனிக்கு உசைன் போல்ட்டை
விட வேகமாக ஓட தயாராக இருக்கிறோம். அடுத்த நாலாண்டில் தமிழ்நாடு பேரரசு, வல்லரசு
என படிப்படியாக லிப்டில் பறக்கும் என்பதை நினைக்கையில் உள்ளம் பேருவகை
கொள்கிறது.
புகழ்பெற்ற இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ள படம்.
துபாயில் டாக்டர் கம் ப்ளேபாய் ஆக இருப்பவன் அருண். அவ்வப்போது க்ரெடிட் கார்ட்
கம்பனிக்கு பணம் கட்டாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். நோயாளியாக வரும்
பெண்ணிடம் உள்ள வைர நெக்லஸ் மூலம் அவன் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதே
கதை.
மலையாள சினிமாவிற்கு நம்பிக்கை தரும் வரவாக பஹத் மெருகேறி வருகிறார். அறுபதை
கடந்தாலும் விக் வைத்தே தீருவோம் என்று அடம் பிடிக்கும் இந்திய நாயகர்களுக்கு
மத்தியில் தன் தந்தை வற்புறுத்தியும்‘இயற்கையாகவே நடிக்கிறேன். என் நடிப்பால் மட்டுமே மக்களை
கவர நினைக்கிறேன்’என்று சொல்லிய இளம் நாயகன். அவருடைய
மனைவியாக வரும் பெண்ணின் நடிப்பும் சிறப்பு. சமீபத்தில் வந்த மலையாள மூவிக்களை
ஒப்பிடுகையில் இது ஒரு படி மேல்தான். கொஞ்சம் பொறுமை இருப்பின் ஒரு முறை
பார்க்கலாம்.
மே 20 சென்னை யூத் பதிவர் சந்திப்பிற்கு வெளியூரில்
இருந்து வரும் தொண்டர்கள் சென்னை நகரை போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காட
செய்யாமல் சீராக அணிவகுத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேடம் தூள் கிளப்பிய “அம்மனோ சாமியோ” பாடல்
உங்களுக்காக. "எங்களை பிடித்த பேய்களை விரட்டி ஆட்சிக்கு வந்த எங்க முத்து மாரியே. கரண்ட்
கட் பண்ணி பில் பணத்தை மிச்சப்படுத்திய தங்க கருமாரியே". பாடலைக்கண்டு ஆவேசத்தில் ஆபீஸ் சேரில் சாமியாடி
வேலைக்கு ஆப்பு வைத்து கொள்ள வேண்டாமென நண்பர்களை எச்சரிக்கிறோம்.
மே 13 அன்று மாலை அடையாறில் நடந்த ட்விட்டர் சந்திப்பிற்கு
செல்லலாம் என தீர்மானித்து நான், பிலாசபி, அஞ்சாசிங்கம், கே.ஆர்.பி. அண்ணன்
நால்வரும் வண்டியை கிளப்பினோம். ‘எலேய்..இருடா தம்பி நானும் வர்றேன்’ என்று
அக்கப்போர் ராஜா திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் வந்தார். அவசர வேலை என
கே.ஆர்.பி.எஸ்கேப் ஆக ‘அதனால என்ன நான் பைக் கொண்டாறேன். டோன்ட் வொர்ரி தம்பி’
என்று அக்கப்போர் ஆறுதல் சொன்னார். அன்று விதி இப்படி வீதி வீதியாக விளையாடும்
என்று நான் நினைக்கவில்லை.
சுத்தமாக ப்ரேக் பிடிக்காத சாமுராய் பைக்கை மேன்சன்
நண்பரிடம் அக்கப்போர் இரவல் வாங்கி வயிற்றை கலக்கிவிட்டார். காலால் பலமுறை ப்ரேக்
போட்டு உசுரோடு ட்விட்டர் மீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தார் புண்ணியவான்.அக்கப்போர்னு கரெக்டா தான்யா பேரு செலக்ட் பண்ணி
இருக்கீரு. அந்த பைக்க வித்து ஒரு பேப்பர் கப் வாங்க முடியுமாய்யா?
கணிசமான அளவில் ட்விட்டர்கள் அரங்கில் திரண்டிருக்க கடைசி
வரிசையில் நாங்கள் அமர்ந்தோம். வழக்கம்போல் நம்ம சிபி ‘காரியத்தில்’ கண்ணாக
இருந்தார். பெண்கள் பக்கம் அவருடைய கேமரா ஓவர் டைம் பார்த்து கொண்டு இருந்தது. நண்பர்களுடன்
சேர்ந்து பல ஆங்கிளில் க்ரூப் போட்டோ எடுத்து மைசூர் மகராஜா பேத்தி கல்யாண
ஆல்பத்தை விட பெரிய சைஸ் போட்டோ தொகுப்புகளை தேற்றினார்.பன்னிக்குட்டி ராமசாமி போல செவ செவா கலரில் இருந்த
நண்பர் ஒருவர் என்னிடம் வந்து கை குலுக்கினார். அட நம்ம எம்.ஜி.ஆர். (R for Ravikumar). கிரேசி கோபால் உடன் சேர்ந்து மிமிக்ரி செய்து அசத்தினார்
நம்ம எம்.ஜி.ஆர். அந்த செட்டுடன் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்தோம்.
மீண்டும் அரங்கில் வந்து அமர்ந்ததும் ‘ஹல்லோ’
என்று ஒரு மர்ம நபர் கைகுலுக்கினார். ‘நீ..ங்...க’ என்று இழுத்தேன். ‘நாகராஜசோழன்
எம்.ஏ.’ என்றார். அவரை முதன்முறை சந்தித்ததில் மகிழ்ச்சி. (கோமாளி) செல்வா முதல்
பெஞ்ச் மாணவன் போல பவ்யமாக அமர்ந்திருக்க அவரிடமும் சில வார்த்தைகள் பேசினேன்.
தனது ட்வீட்கள் புத்தகமாக வந்துள்ளதென கூறினார். ‘மிக முக்கியமான’ வேலை இருந்ததால்
சில நிமிடங்களில் டெர்மினேட்டர் அர்னால்ட் பைக்கில் ஏறி பறந்தார் நாகராஜ சோழன்.
கேபிள் ஆற்றும் சொற்பொழிவு..அருகில் சுரேகா
‘கேட்டால் கிடைக்கும்’ குறித்து கேபிள் சங்கர் மற்றும்
சுரேகா பேசியபோது பலத்த கைதட்டல்கள். கவிதை,
குறும்படம், பாடல்கள் என பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரபல ட்விட்டர்களில் ‘தோட்டா’
எனது பேவரிட். அவர் வராதது சற்று ஏமாற்றத்தை அளித்தது.
காதலில் விழுந்தவன் கண்ணெதிரே காத்ரீனா கைப்
வந்தால் கூட கண்டு கொள்ளாமல் போவான் என்ற பழமொழிக்கு உதாரணம் பிலாசபி பிரபாகரன்
என்றால் அது மிகையில்லை. நண்பர்கள் பலர் ஜீ டிவிக்கு உற்சாகமாக பேட்டி தந்து
கொண்டிருக்க அருகில் இருந்த தடாகத்தில் அமைதியாக தாமரை இலைக்கு தண்ணீர்
ஊற்றிக்கொண்டு இருந்தது நம்ம பயபுள்ள. ‘என்னய்யா இது’ என்று கேட்டால் “இந்த இலைல
தண்ணி ஒட்டாம நழுவி ஓடுது பாத்தீங்களா. இதுதான் வாழ்க்கையின் பிலாசபி. காதலும்
அதுபோல” என்று உச்சி வெயிலில் எனக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சாரு அண்ணன். காதல்
முத்திருச்சி தம்பி. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.
ட்விட்டர் சந்திப்பு குறித்து அக்கு அக்காக
பிரித்து விளக்குவதில் அண்ணன் சிபி மிகப்பெரிய எக்ஸ்பர்ட் என்று நான் சொல்லியா
தெரிய வேண்டும். அவருடைய ட்விட்டர் சந்திப்பு ‘அனுபவங்களை’ படிக்க கிளிக் செய்க:
சென்னையில் பதிவர் சந்திப்பு என்றால் அது
பெரும்பாலும் டிஸ்கவரி புக் பேலஸில்தான்
நடக்கும். இதுவரை ஒரு முறை கூட நில அபகரிப்பு கேஸ் போடாமல் நமக்கு இடம் அளித்து
வரும் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி. வரும் மே 20 ஆம் தேதி ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள சென்னை யூத் பதிவர் சந்திப்பின் முன்னோட்டமாக வேடியப்பன் அவர்களின்
மடல் உங்கள் பார்வைக்கு:
மீண்டும்ஒரு பதிவர் சந்திப்புக்கு தயாராகிவிட்டோம். இந்த
நேரத்தில் எப்போ எங்கு எப்படி செம்புலப்பெயர் நீர்போல் பதிவர்களோடு நான்
கலந்துபோனேன் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையில்லை. எனக்கும்
பதிவர்களுக்குமானஇந்த உறவு என்பது
ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லலாம். ஆனால் ஒரு விவாசாயி பெத்த புள்ளைங்கிற
முறையில எனக்கு தெரிஞ்சு எந்தப் பயிரும் ஆயிரங்காலத்துக்கு அழியாம தொடருதான்னு
தெரியில. நான் சின்ன வயசுல பாத்த சாமை, வரகு, தினை போன்ற சத்துமிக்க பயிர்
வகைகளே இப்போது காணாமல் போச்சு. சரி ஆயிரங்காலத்துப் பயிர் வேணா, ஆயிரங்காலத்துப் File எனலாம் என்றால் காலையில சேவ்
செய்து வெச்சுட்டுப்போற பைல மதியம் வந்து ஓபன் பண்ணுனா வைரஸ் அது இதுனு காணாமப்
போயிடுது. அப்போ எந்த உவமையை அடிப்படையா வெச்சு எனக்கும் பதிவர்களுக்குமான பந்தத்த
விலக்க முடியும்னு நம்புறேன்னு தெரியில. யாராவது காசுகொடுத்தால் ஒரு புத்தகமாகவே
போட்டு சம்பாதித்து விடுவேன். அவ்வளவு விசயம் ஒரே நேரத்தில ஞாபகத்திற்கு வருது.
வந்த வேலையை விட்டுட்டு பந்தக்காலைப்
பிடிச்சுட்டு நிக்கிறான்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நான் இப்போ சொல்ல வந்தத
விட்டுட்டு வேற எதையோ எழுதிட்டு இருக்கேன்னு நினைச்சீங்கன்னா அதுக்கு காரணம்
பதிவர்களான நீங்கதான்.நீங்க கத்துக் கொடுத்ததுதான்.
சரி விசயத்துக்கு வரேன்.2009 முடிவில் டிஸ்கவரி புக் பேலஸ்
ஆரம்பிச்சப்பதான் எனக்கு பதிவர்கள், பிளாக்கர்ஸ்ங்கிற சொல்லே
கேள்விப்பட்டேன். அப்புறம் கேபிள்ஜி எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து
எழுதுனு சொன்னப் பிறகுதான் சரி... ப்ளாக் எழுதிறதில இருக்கிற நல்லது கெட்டது
தெரிஞ்சது.
நான் ஒரு போஸ்ட் போட்டுட்டு, அதை
படிக்கச் சொல்லி நானே போன் போட்டு சொல்லி, அப்புறம் பின்னூட்டம்
வேற போட்டாகனும்னு கட்டாயப்படுத்திய காலங்களில்தான் உங்களின் சகிப்புத்தன்மையை
நான் முழுதாக உணர முடிந்தது. எனக்கும் அப்போ ஆயுசு கெட்டிங்கிற சந்தோஷம்.
அதுக்கபுறம்தான்சரி.. வேணா.... முதல்ல மற்றவங்க எழுதுறத நம்ம
படிக்க ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வரமுடிஞ்சது.சென்னையில இன்னைக்கு
டிஸ்கவரி புக் பேலஸ்- ஒரு தவிர்க்க முடியாத புத்தக கடையா மாறி இருக்குனா அதுக்கு
காரணம் நிச்சயமா பதிவர்கள்தான்னு உறுதியா சொல்வேன்.வருகைத் தரும் ஒவ்வொரு
பதிவர்களையும் நான் ஆவலோட எதிர்பார்ப்பேன். அவர்களோடு தொடர்ந்து நல்ல நட்பை
வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.
அதேபோல் இதுவரை எந்தப்
பதிவர்களும் யாரும் தவறாக ஒரு வார்த்தை பேசி நானும் பார்த்த்தில்லை. அந்த வகையில்
உண்மையில் பதிவர்கள் அன்பு என்ற கயிற்றில் ஒற்றுமையாக காயும் உப்புக்கண்டம்
எனலாம். அதனால் சாதாரண இதை பதிவர் சந்திப்புனு சொல்லிட முடியாது. நமது நலம் விரும்பிகளை
ஒரு நாள் நமது வீட்டுக்கு அழைப்போம் இல்லையா..அப்படியே!
தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் மே
13.ம் தேதி நாம் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் பதிவர் சந்திப்பு நடத்தமுடியாமல் போனது. அதன்
பிறகு கே.ஆர்.பி வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும்போது நான் முடிந்த
அளவு முயற்சிக்கிறேன் என்றேன், 13 அம் தேதி அன்று புத்தக விமர்சனத்திற்கு
ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் முடியாது என்றும்,
பத்திரிக்கைகளுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டோம் என்றும் சொன்னார்கள்,
துயரமான முடிவுகளைக் கொண்ட காதல் படங்களின் கடைசிக்காட்சியில்
காதலனின் கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிப் போகும் காதலியைப் போலகே ஆர் பியை நான் பிரிந்து
விடை பெறும்போது எல்லையில்லா ஏமாற்றத்தோடு இந்தமுறை நாம் பதிவர்களை
தவறவிட்டுவிட்டோம் என்று நினைத்தேன். அதோடு அதே 13.ம்தேதி நமக்கும் நிகழ்ச்சி
இருப்பதால் குறைந்தபட்சம் கூட்டத்தின் ஒரு மூலையில் நின்று கைவிடப் பட்ட
காதலனைப்போல ஒரு வாய் காஃபி தண்ணிகூட குடிக்கமுடியாமல் போய்விட்டதே என்று
ஏங்கினேன்.என்ன ஆச்சரியம்? 5 வருடம் கழித்து என்று டைட்டில்
கார்டு போட்டு சேர்த்து வைத்து காதலைக் காப்பாற்றும் இயக்குநர்களைப் போல ஒரு
வகையில் நாம் ஒரு வாரம் கழித்து சேர்ந்து இருக்கப் போகிறோம் என்று நினைக்கும் போதுநமக்கான பந்தம் ஏழேழு
ஜென்மத்திற்கும் நிலையானது.. அய்யோ அம்மா..மன்னிச்சுக்குங்க, என்னைக்கும்
நிலையானது:
தோழமையுடன்!
வேடியப்பன்.
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் இப்போதுடிஸ்கவரி புக்பேலஸ்-ல் கிடைக்கிறது, தொடர்பு கொள்ளவும்9940446650
மே 20 அன்று பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வோர் அனைவருக்கும்
புத்தகங்களை 90% தள்ளுபடியில் வேடியப்பன் வழங்குவார் என்ற தகவல் காற்றுவாக்கில்
வெகுவேகமாக பரவி வருகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எமது ஆனந்த கண்ணீர்
துளிகளை ஷவர் பாத்தாக பொழிந்து தலைவர் வேடியப்பன் அவர்களை கௌரவிப்போம் என்று
சொல்லிக்கொள்கிறோம்.
பதிவர் சந்திப்பு
குறித்த கூடுதல் தகவல்கள் goundamanifans.blogspot.in
தளத்தில் வெளியாகும் நண்பர்களே!!