தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் புதுவரவாக வந்திருப்பது சத்தியம் செய்தி சேனல். தினமும் காலை 9 - 10 நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுவதாக அஞ்சாசிங்கம் மற்றும் பிரபாகரன் வாயிலாக செய்தி வந்தது. வியாழன் அன்று காலை கே.ஆர்.பி. VS அஞ்சாசிங்கம் மோதும் நிகழ்ச்சி என்பதால் இருவரின் தளபதிகளான பிரபாகரனும், நானும் ராயபுரத்தில் உள்ள ஸ்டுடியோவிற்கு உடன் சென்றோம். எங்களை விட ஆர்வமாக இருந்தவர் கே.ஆர்.பி.யின் சுட்டி புதல்வர். நிகழ்ச்சியின் தலைப்பு: காதல் திருமணமா? நிச்சயிக்கபட்ட திருமணமா? எது இக்காலத்திற்கு உகந்தது.
காலை 8 மணிக்கு சேனல் அலுவலகத்தினுள் நுழைந்தோம். எப்படிப்பட்ட ஏவுகணைகளை எதிரி மேல் ஏவுவது என டிஸ்கசன் ரூமில் தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தார் கே.ஆர்.பி. அடுத்த சில நிமிடங்களில் சிங்கமும், பிலாசபியும் வந்தனர். பிலாசபியை பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. சென்ற வாரம் பார்த்த ஆள் இம்முறை ரணகளமான கெட்டப்பில் முற்றிலும் மாறி இருந்தார். 'தயவு செஞ்சி இந்த கெட்டப்ல என்னை போட்டோ எடுத்ததை ரிலீஸ் பண்ண வேண்டாம்' என தம்பி கதறியதால் அதை வெளியிட முடியவில்லை.
.
அதிதீவிர
ஆலோசனையில் கே.ஆர்.பி. காரு, அஞ்சாசிங்கமுலு
ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை நடத்தியவர் பெயர் க்றிஸ்டோபர். காதல் திருமணங்களை ஆதரித்து கே.ஆர்.பி.பேசினார். தற்கொலைக்கான காரணங்களில் முதல் இடம் காதல் சார்பானவையாகவே உள்ளன என புள்ளிவிவர ஆதாரத்துடன் பேசினார் க்றிஸ்டோபர். இதுவரை மொத்தம் 39 காதல் ஜோடிகளுக்கு கல்யாணம் செய்து வைத்த அஞ்சாசிங்கம்(வடசென்னை 'நாடோடிகள் சசி' ரசிகர் மன்ற பொருளாளர்) காதலுக்கு எதிராக பேசியது புருவத்தை உயர்த்த வைத்தது. காதல் ஜாதி, மத பேதங்களை உடைக்கும். தனக்கான சரியான துணையை தேர்வு செய்யும் சுதந்திரம் காதல் செய்வோருக்குதான் அதிகம் கிடைக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அதற்கான வாய்ப்பு குறைவு என்பது கே.ஆர்.பி.யின் வாதம். ஜாதிகளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. துணையை தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவருக்கும் தரப்பட்டு உள்ளது. அது காதல் செய்வோருக்கு மட்டுமே உள்ளது என்பதை ஏற்க இயலாது என்றார் சிங்கம்.
இடையிடையே நேயர்கள் தொலைபேசியில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தவாறு சில கேள்விகளையும் நம் பதிவர்களுக்கு முன் வைத்தனர். ஸ்டுடியோவின் உள்ளே ஒரு மணிநேரம் இது போன்ற நேரடி நிகழ்ச்சியை முதன் முறை பார்ப்பது வித்யாசமான அனுபவமாக இருந்தது எனக்கு. வரும் ஞாயிறு (மே 29) அன்று காலை நேரடி ஒளிபரப்பில் கிரிக்கெட் சம்மந்தமான தலைப்பில் வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களுடன் விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன். பெரும்பாலும் பதிவர்களுக்கு முன்னுரிமை தந்து நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால் இதில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்க:
செல்வின் (எ) அஞ்சாசிங்கம்: 94441 25010
பிலாசபி பிரபாகரன் - 80158 99828
வெளிநாட்டில் உள்ள பதிவர்களும் வெப் கேம் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய உள்ளதாக செல்வின் கூறி உள்ளார். விவாதத்தில் பங்கு பெறவுள்ள அனைத்து பதிவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் காணொளி தொகுப்பு விரைவில் goundamanifans.blogspot.in தளத்தில் வெளியிடப்படும் நண்பர்களே. நன்றி.
.................................................................................இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் காணொளி தொகுப்பு விரைவில் goundamanifans.blogspot.in தளத்தில் வெளியிடப்படும் நண்பர்களே. நன்றி.
11 comments:
அடடே புதுசா இருக்கே. கே.ஆர்.பி அண்ணன் சும்மா கெத்தா இல்ல இருக்கார்.
சிவா இனி பதிவர்களுக்கு பொறுப்பு கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது...!
புதுமையா இருக்கே...இனி பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான்
புதுமையா இருக்கே...இனி பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான்
புதுமையா இருக்கே...இனி பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான்
எங்க ஊரில் இன்னும் இந்த சேனல் வரல :-)
அடுத்து கலந்துக்க போகும் உங்களுக்கு வாழ்த்துகள் :-)
கிரிக்கெட் பத்தி உங்க வித்தியாசமான கண்ணோட்டம் தெரியும் என்பதால் என்ன சொல்ல போறீங்கன்னு செம எதிர்பார்ப்பா இருக்கு! அந்த காணொளியும் மறக்காம போட்டுடுங்க
மீண்டும் வாழ்த்துகள்
முதலில் வாழ்த்துக்கள் சிவா...
#கிரிக்கெட்டு இந்தியாவையே கெட்டுக் குட்டிச் சுவராக்கியிருக்கு சார்.... என்னமாறி கவருமண்டுக்கு ரெவினியூ தரும் பார்ட்டிங்க மட்டும் இல்லைன்னா, கிரிக்கெட்டாவது இன்னொன்னாவது...
என்னாது, ரெவினியூ எப்புடியா?
யோவ், டாஸ்மாக் கடைல கஷ்டமருய்யா....
:-)
எனக்கு என்ன பயம்னா....
சத்தியம் டி.வி.-க்கு ஏதும் ஆகிடகூடாதுன்னு....???!!!!!!????
என்னாது ஒன்பது மணி நிகழ்ச்சிக்கு எட்டு மணிக்கெல்லாம் டிவி சேனலுக்கு போயிட்டாங்களா?
ஞாயித்து கிழமையும் அதுவுமா என்னை எத்தனை மணிக்கு வர சொல்ல போறீங்களோ ?
:((
:))
அஞ்சாசிங்கம் ரெண்டாவது போட்டோவில் ஜம்முன்னு இருக்கார். பிரபா போட்டோ போட்டிருக்கலாம்.
நிகழ்ச்சியில் பேசியதையும் சுருக்கமா சொன்னது நைஸ்
good
வாழ்த்துகள்.
Post a Comment