அஜீத்திடம் சிக்கிய கவுண்டர்:
"ம்ம்.எழுந்துட்டேன்..இதோ வர்றேன்"
"பல்லு வெளக்காம் கிட்ட வராதன்னு சொன்னா கேக்கறியா? கொஞ்சம் இரு. பத்து ஸ்டெப் பேக்ல போயிடறேன்"
"இமய மலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?"
"எனக்கு ஒண்ணும் இல்ல. ஆர்வக்கோளாறுல பாகிஸ்தான் பார்டருக்கு அந்தப்பக்கம் கொடிய ஏத்தி வச்சி இருக்கடி மாப்ள. எங்க அவன்கிட்ட போயி 'உனக்கென்ன'ன்னு கேளு பாப்போம்?"
"ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?"
"ஆமாம் இவரு பெரிய கொலம்பசு. ஏழு கடலும் என்ன சொல்லிச்சின்னு ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காரு"
"எரிந்து போன சாம்பலில் இருந்து விரிந்து பறக்கும் பீனிக்ஸ் போல மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?"
"இந்த தொப்பைய வச்சிக்கிட்டு ஒழுங்கா ஸ்டெப்ஸ் போட்டு ஆடவே தள்ளாடும்போது, வானத்துல பறக்க வேற போறியா? எகத்தாளம் ஜாஸ்திதான்.
"உனக்கென்ன? உனக்கென்ன? உனக்கென்ன? உனக்கென்ன?"
"அது நாங்க கேக்க வேண்டிய கேள்வி...ஆஞ்சநேயா, ஆழ்வார், அசல், அட்டகாசம்..ரேஞ்சுல வந்த படத்த எல்லாம் நாங்க பாக்காம செதறி ஓடுனா உனக்கென்ன? உனக்கென்ன?"
"ஏற்றி விடவோ தந்தையும் இல்லை, ஏந்திக்கொள்ள தாய் மடி இல்லை. என்னை நானே சிகரத்தில் வைத்தேன். அதனால் உனக்கென்ன?"
"தம்பி...போதும். எம்.ஜி.ஆர். கலைஞர், சிவாஜி, ரஜினி...இவங்க பாக்காதா வறுமையா? உன்னை விட ரொம்ப வசதி கொறஞ்ச குடும்பத்ல பொறந்து பல நாள் பட்டினியா திரிஞ்சிதான் இந்த ஒசரத்துக்கு வந்துருக்காங்க. மைன்ட் இட்."
"இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை"
"டான்ஸ் ஆடும்போது தம் அடிக்க கூடாதுன்னு சொன்னா கேக்கறியா. மாஸ்டர் அவரு பாக்கெட்ல இருக்குற லைட்டரை தூக்கி கடாசுங்க"
"நெருப்பென்றும் தலைகீழாய் எரிவதில்லை. அலைகளின் தலையோ குனிவதில்லை"
"நெருப்பு எதுக்கு சம்மர் சால்ட் அடிச்சி எறியணும்? அலைக்கு ஏது தல? படுவா வாய்ல வந்ததை எல்லாம் பாடாத. கடவாப்பல்லுல கத்திய வுட்டு ஆட்டிடுவேன்"
"நீ என்ன உருகும் பனிமலை. நான்தானே எரிமலை..எரிமலை.."
"இப்படியே பாடிட்டு திரிஞ்சா 'பரங்கிமலை' தியேட்டருக்கு போற கூட்டம் இன்னும் ஜாஸ்திதான் ஆகும்"
"ஓப்பனிங் டே கூட்டத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல. மறுநாள் ஒரு ஈ காக்கா கூட கண்ணுல பட மாட்டேங்குதே!!"
"ஹிட்லராக வாழ்வது கொடிது. புத்தனாக வாழ்வது கடிது. ஹிட்லர், புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன?"
"என்னமா திங்க் பண்றான்யா. உனக்கு ஹிட்லர் மீசை வச்சி பாத்தா எப்படி இருக்கும்? வேணாம் விட்ரு. ஐயா இந்த அமெரிக்க மாப்பிள்ளை ரோல் எல்லாம் பண்ண மாட்டீங்களா? ஸ்ட்ரைட்டா இண்டர்நேஷனல் ஹீரோதானா ?"
"வெற்றி என்பது பட்டாம்பூச்சி. மாற்றி மாற்றி மலர்களில் அமரும். உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல"
"அவனைக்கேட்டா 'வாழ்க்க ஒரு வட்டம். கெலிக்கறவன் தோப்பான். தொக்கறவன் கெலிப்பான்' ன்னு சொல்றான். அதையே கொஞ்சம் டிங்கரிங் பண்ணி நீ இப்படி சொல்லிட்டு திரியற. ஆக ரெண்டும் பேரும் ஏகப்பட்ட ப்ளாப் குடுக்கறது ஜகஜம்னு சொல்ல வர்றீங்க..ரேஸ்கல்ஸ்"
"எனக்கொரு நண்பனாய் அமைவதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை. எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு தகுதியில்லை"
"நீங்க வேணும்னா இளய தளபதி மாதிரி டாக்டர் பட்டம் வாங்கி ஒரு மெடிக்கல் காலேஜ் கட்டுங்க சார். அதுல ஆறேழு அரியர்ஸ்ல பாஸ் பண்ணியாவது தகுதிய வளத்துக்கறோம்"
"நீ என்ன உருகும் பனிமலை. நான்தானே எரிமலை. எரிமலை. உனக்கென்ன? உனக்கென்ன? உனக்கென்ன தம்பி உனக்கென்ன?"
"ஏம்பா..இந்த இளைய தளபதி ரசிகர்கள் யாருனா இருந்தா தம்பிக்கு கொஞ்சம் கம்பனி குடுங்கப்பா..வயித்த கலக்குது. போயிட்டு வந்துடறேன்"
..........................................................................
"ஏம்பா..இந்த இளைய தளபதி ரசிகர்கள் யாருனா இருந்தா தம்பிக்கு கொஞ்சம் கம்பனி குடுங்கப்பா..வயித்த கலக்குது. போயிட்டு வந்துடறேன்"
..........................................................................
................................................
.................................................
6 comments:
ஏம்பா...தல..தல...அப்டிங்கறாங்களே!அப்படி என்னதான் தழை...ஆடு திங்கிற தழையா..? இல்ல மாடு திங்குற தழையா? அப்படி என்னதான்யா தழை...யோவ் முறைக்காதிங்கய்யா குழந்தை புள்ள பயப்படுது பாரு....
ரொம்ப ஓவரா கலாய்சிடிங்க .. தல வெறியர்கள் வரபோறாங்க
இன்று
கதம்பம் 19-04-2012
அஜித் மேல அப்படி என்ன வைதேரிச்சல்? உனக்கு முதுகுல ௬ ஆபரேஷன் பண்ணி, நீ சினிமாவுல டான்ஸ், பைட் எல்லாம் செஞ்சு ஒரு படம் உன்னால நடிக்க முடியுமா? மொதல்ல அஜித்-யை விமர்சிக்கும் தகுதி உனக்கு இல்ல.
உனக்கென்ன? உனக்கென்ன? தம்பி, உனக்கென்ன? ரொம்ப ஓவரா?
எப்படியோ கவுண்டர் பேர சொல்லி கவுன்டர் டயலாக் போட்டு அஜீத்த கேவலப்படுத்திட்டீங்க...இருங்க அஜீத் ரசிகர்களுக்கு ஃபார்வர்டு பண்றேன். :)
Post a Comment