CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, March 27, 2012

உலக சீரிஸ் ஹாக்கி போட்டி - நிழற்படங்கள்


மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது எடுத்த படங்கள்:

* போட்டி துவங்கிய சற்று நேரத்தில்  'ஹாக்கி' எனும் வார்த்தை அடங்கிய நீல நிற டி ஷர்ட் சகிதம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் திரளாக வர ஆரம்பித்தனர்.  ஒருவர் கையில் பேண்ட் வாத்தியம் வேறு. ஆஹா..இன்று ஆட்டத்தை பார்க்க விடாமல் சத்தம் எழுப்பியே வெறுப்பேற்றுவார்களோ  என எண்ணினால்..நடந்த கதையே வேறு. அவர்களிடம் இருந்த பேண்டை வாங்கிக்கொண்டு போட்டி முழுக்க வாசித்துக்கொண்டே இருந்தார் ஒரு தாதா. யார் அவர்? பிறகு பார்க்கலாம்.  

                                                           
* ஹாக்கி விளையாட்டிற்கு கணிசமாக ஆதரவு பெருகி வருவதை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் திரண்டிருந்த ரசிகர் கூட்டம்.
                             
                                             
   
* ஆஷா, நிஷா, உஷா, த்ரிஷா..யாரு வேணும்னாலும் என்னை காதலிச்சிட்டு போகட்டும். என்னோட லவ்வு ஹாக்கி மேலதான்...        

                                                           
* தமிழக அரசால் சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஹாக்கி நட்சத்திரம் ராஜாவுக்கு ஸ்டேடிய வாசலில் ஒரு பேனர். அருகில் இருப்பவர் தமிழக முதல்வர்...

                                                                                                 
* பேண்ட் வாத்தியத்தை அடம் பிடித்து வாங்கி தனி ஒரு ஆளாக வாசித்த வித்வான் இவர்தான்...

                                                                     
* பஞ்சாப்போ, சென்னையோ.. யார் கோல் அடித்தாலும் நம்ம குட்டி வித்வானுக்கு எல்லாம் ஒண்ணுதான்.  ஒருமணிநேரம்  ஓயாமல் கச்சேரி வாசித்த சுட்டி தாதா..........
                               
                                                                 
* சென்னைக்காக ஆடிய இம்ரான் வர்சி பாகிஸ்தான் நாட்டு ஆளாக இருப்பினும் நம்மூர் ரசிகர்களிடையே செம பாப்புலர் ஆகிவிட்டார். ஆட்டம் முடிந்து ரசிகர்களுக்கு சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வந்து கொண்டிருக்கையில் "வர்சி வர்சி" என ஆர்ப்பரித்தனர் இளைஞர்கள். அவர்கள் அனைவருக்கும் அருகில் வந்து கையை அசைத்து அன்பை ஏற்றுக்கொண்டார் வர்சி. எந்த நாட்டவர் ஆனாலும் அவர்களை மதித்து உற்சாகம் செய்வதில் இந்தியாவிலேயே சென்னை ரசிகர்கள்தான் முதல் இடத்தில் இருப்பார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்தது இந்நிகழ்வு.
 
                                                                                    இம்ரான் வர்சி
                                                                          pic: worldserieshockey.com

 * கோவை மண்ணை சேர்ந்த வீரர் ஆடம் சிங்க்லர் மின்னலென களத்தில் ஆடுவதை பார்க்கையில் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக வருவதற்கான  தகுதி இருப்பது நன்றாகவே தெரிகிறது.    

                                                                              Pic: worldserieshockey.com

மொத்தத்தில் ஹாக்கி மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ள  உலக ஹாக்கி சீரிஸ் போட்டியை மின்னொளியில் கண்ட இனிமையான தருணத்தை மறக்க இயலாது. 

Photos: madrasbhavan.com

...............................................................


                                                                     

7 comments:

Elamparithi said...

நாலு மணிக்கு பேய் கூட உறக்கதுல இருக்கும் தல....

yathan Raj said...

Supper valthukkal

MANO நாஞ்சில் மனோ said...

ஹாக்கி ஹாக்கி வாழ்க வாழ்க....!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

ஹாக்கிக்கு ஒரு பதிவு சிவா கிரேட்! ஆனா ஒன்னு தொடர்பதிவு போட்டுராத ராசா!

மாலதி said...

supper

மாலதி said...

supper

சீனு said...

அலுவலகத்தில் வைத்துப் படித்தேன்... படங்கள் எதவும் தெரியவில்லை.. தாதா என்றதும் வேறு யாரோ பிரபலம் என்று நினைத்தேன்... குழந்தையாக இருக்கும் போதே பிரபலம் ஆனவர் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன்

Related Posts Plugin for WordPress, Blogger...