CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, May 30, 2011

கேபிள் சங்கர் - சினிமா வியாபாரம்                                                                 


நான் சினிமா மீது ஓரளவு ஆர்வம் உள்ளவன் என்ற முறையிலும், எனது தந்தை இந்த துறையை சார்ந்தவர் என்பதாலும் திரைத்துறை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள கூடுமானவரை தவறியதில்லை. இந்த புத்தக தலைப்பை பார்த்ததும் வாங்கவேண்டும் என எண்ணியதற்கு முக்கிய காரணம் சங்கர் அவர்களின் எழுத்து நடை. ஏகப்பட்ட பக்கங்களுடன் மிக ஆழமாக என்னைப்போன்ற பாமரனுக்கு புரியா வண்ணம் எவரேனும் இந்த தலைப்பில் எழுதி இருந்தால் இப்புத்தகத்தை வாங்க பல முறை யோசித்து இருப்பேன். சங்கர் ஒரு 'காஷுவல் - கம் - கன்டென்ட்' ஸ்டைல் எழுத்தாளர் என்பதால் அந்த தயக்கம் நீங்கியது. 

16 வயதினிலே, சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்கள் வசூலில் வெற்றி பெற்றதோடு, விருதுகளையும் அள்ளியது பற்றி குறிப்பிட்டு உள்ளார். அது மாதிரியான நிலை இக்கால கட்டத்தில் இல்லாதது வருத்தமே. எந்த படம் ஓடும், ஓடாது என்பதை கணிப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல என்பதும், தவறாக கணித்து விநியோகம் செய்வதில் ஏற்படும் ரோல்லர் கோஸ்டர் ரைட் அனுபவங்கள் பற்றியும் ஆரம்ப பக்கங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சூப்பர் செவன் எனும் தலைப்பில் ஏரியா வியாபாரம் பற்றி படிக்கையில் மெர்சன்டைசிங் உரிமை எனும் வார்த்தை வருகிறது. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இந்த விசயத்தில் இன்று வரை ஏன் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை என்பது ஆச்சர்யமே. அப்படியே டி-ஷர்ட், தொப்பி போன்றவை மூலம் விளம்பரம் செய்தாலும் புதுமையான படங்கள் மற்றும் வார்த்தைகள் இல்லாமல் போவதும், லோ க்வாலிட்டியும் மெர்சன்டைசிங் எனும் முறை இங்கு எடுபடாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பது என் கருத்து. திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி ஏரியா பற்றி வெகு சுருக்கமாக எழுதி இருக்கிறார் கேபிள். ஒரு சில வரிகள் நீட்டி இருக்கலாம். 

தியேட்டர் ஆட்கள், விநியோகிஸ்தர்கள் என பல நிலையில் இருப்பவர்கள் எப்படி டக்கால்டி கணக்கு காட்டி பணத்தை பாக்கெட்டில் போடுகிறார்கள் என படு சுவாரஸ்யமாக எழுதி இருப்பதற்கு ஹாட்ஸ் ஆப். திரைக்கு பின்னே இத்தனை வகையான கால்குலேசன்கள் இருப்பது மலைக்க வைக்கிறது. லேப்பில் கடைசி தருணங்களில் படப்பெட்டியுடன் நடக்கும் போராட்டங்கள் பற்றிய செய்திகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.  


ஹாலிவுட் சினிமா வியாபாரம் குறித்து ஏகப்பட்ட தகவல்களை புத்தகத்தின் மறுபாதியில் அள்ளித்தந்திருக்கிறார். பேமிலி பாப்கார்னை ஒரே ஆள் சாப்பிடுவது எவ்வளவு கஷ்டமோ, அந்த அளவுக்கு செய்திகள் புதைந்து கிடப்பதால், சாதாரண சினிமா ரசிகன் கண்டிப்பாக நான்கு கப் காப்பி குடித்து விட்டுத்தான் அவற்றை படித்து முடிக்க முடியும். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களை பற்றி குறிப்பிட்டுள்ள கேபிள் சங்கர், எப்படி PIXAR அனிமேசன் கம்பனியை பற்றி குறிப்பிட மறந்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகளை அள்ளி அனிமேசன் துறையில் உச்சத்தில் இருக்கும் நிறுவனம் பற்றி ஒரு பேரக்ராப் ஆவது கண்டிப்பாக எழுதி இருக்கலாம். அடுத்த பாகத்தில் அது குறித்து எழுதினால் நன்றாக இருக்கும். ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. இனிவரும் பதிப்புகள்  இத்தகைய குறைகள் இன்றி வெளிவரும் என நம்புகிறோம்.   

விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், அரங்க உரிமையாளர்கள் என பலரும் கலக்சன் பணத்தை ஷேர் செய்வதில் மண்டையை பிய்த்து கொள்வதை பார்த்தால் நமக்கு மண்டை காய்கிறது. இதற்கு தீர்வு சொல்ல கணித மேதை ராமானுஜம் மறுபிறவி எடுத்தால்தான் உண்டு என உணர்த்துகிறது வியாபார தந்திரம் குறித்த பகிர்வுகள். இப்புத்தகத்தை படித்து முடித்ததும் ஆசிரியர் கேபிள் சங்கரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். அடுத்தமுறை ஆந்திர, கேரள மற்றும் கன்னட ஏரியாக்களின் சினிமா வியாபாரம் குறித்து தனி புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் என்பதே அக்கோரிக்கை. அதற்கு பதில் அளித்த அவர், அப்படி எழுத வேண்டுமெனில் அந்த மாநிலங்களுக்கு சென்று நிலவரங்களை அலசி தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கூறினார். கண்டிப்பாக அந்த காலம் கனியும் என நம்புகிறேன். 

கையடக்க புத்தகத்தில் பர்சை பதம் பார்க்காத விலையில் திரைக்கு பின்னே நடக்கும் மேத்ஸ் மேஜிக்குகள் பற்றி எளிய நடையுடன் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம்..ஒவ்வொரு சினிமா ஆர்வலர் மற்றும் அத்துறை சார்ந்தோர் வீட்டிலும் இருக்க வேண்டிய பெட்டகம் என்பதில் மிகையில்லை. திரைத்துறையில் தடம்  பதிக்க போகும் புதியவர்களுக்கு, Its a must read book!

சுமாரான வாசிப்புத்திறன் கொண்ட என்னைப்போன்றோருக்கு, அருகில் இருந்து வழிநடத்தி செல்லும் கைட் போல தோளில் கைபோட்டவாறு சினிமா வியாபார விசயங்களை பகிர்ந்த கேபிள் சங்கர் அவர்களுக்கு..மிக்க நன்றி!!

.................................................

My other site: 
.................................................

சமீபத்தில் எழுதியது:.......................................................

                                                                       

13 comments:

shortfilmindia.com said...

nandri sivakumar
cablesankar

அஞ்சா சிங்கம் said...

வாங்கி படிச்சிட்டா படிச்சிட்டா போச்சி...........

! சிவகுமார் ! said...

Welcome Sir!

! சிவகுமார் ! said...

படிச்சி பாருங்க செல்வின்!

சென்னை பித்தன் said...

//சுமாரான வாசிப்புத்திறன் கொண்ட என்னைப்போன்றோருக்கு, அருகில் இருந்து வழிநடத்தி செல்லும் கைட் போல தோளில் கைபோட்டவாறு சினிமா வியாபார விசயங்களை//
சுருக்கமாக,தெளிவாக புத்தகத்தை விளக்கும் சொற்கள்!
நல்ல பகிர்வு!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரா சமைப்பீங்கன்னு தெரியும், ஆனால் சூப்பரா விமர்சனமும் பண்ணுரீன்களே வாழ்த்துகள் சிவா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

உடனே அந்த புத்தகத்தை பஹ்ரைனுக்கு பார்சல் பண்ணுய்யா..

கந்தசாமி. said...

நல்லாக அலசியுள்ளீர்கள், சினிமா துறையில் உள் நுழைவோருக்கு அந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும் போல ...

செங்கோவி said...

நல்ல புத்தகத்திற்கு நல்ல விமர்சனம்.

! சிவகுமார் ! said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சென்னை பித்தன் சார்!!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
சூப்பரா சமைப்பீங்கன்னு தெரியும்,//

சாரே.. நான் ஒரு பிரம்மச்சாரியாக்கும். சமைக்கிற காலம் நெருங்கவில்லே!!

! சிவகுமார் ! said...

@ கந்தசாமி

வருகைக்கு நன்றி கந்தசாமி. சினிமாவை நேசிப்போருக்கு இது ஒரு நல்ல புத்தகம்தான்.

! சிவகுமார் ! said...

@செங்கோவி.

தங்கள் கருத்துக்கு நன்றி செங்கோவி!

Related Posts Plugin for WordPress, Blogger...